பாகூர்:புதுச்சேரி வேளாண் துறை, பாகூர் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில், காய்கனி மாடி தோட்டம் அமைப்பது குறித்த ஒரு நாள் சிறப்பு முகாம், பாகூர் உழவர் உதவியகத்தில் நடந்தது.திட்ட இயக்குனர் ரவிப்பிரகாசம் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். வேளாண் அலுவலர் தனசேகரன் வரவேற்றார். இணை வேளாண் இயக்குனர் சிவசங்கரமுருகன் முன்னிலை வகித்தார்.துணை வேளாண் இயக்குனர் சிவசுப்ரமணியன், சென்னை வேளாண் பல்கலைக்கழக தோட்டக்கலை துறை பேராசிரியர் சதாசக்தி பங்கேற்று பேசினர்.பாகூர், இருளஞ்சந்தை, பரிக்கல்பட்டு, சேலியமேடு, குருவிநத்தம் கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விரிவாக்க பணியாளர்கள் புவனசுந்தரம், ராமச்சந்திரன், பரமசிவம் செய்திருந்தனர்.ஆத்மா திட்ட மேலாளர் கால்நடை மருத்துவர் செல்வமுத்து நன்றி கூறினார்.
Link: http://www.dinamalar.com/news_detail.asp?id=1325680














0 thoughts on “மாடி தோட்டம் அமைக்க சிறப்பு பயிற்சி முகாம்”