நியூயார்க்: உலகளாவிய அளவில் சுமார் 150 கோடி மக்கள் மாதத்துக்கு ஒருமுறையாவது பேஸ்புக் பக்கத்துக்குள் நுழைவதை வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் பேஸ்புக்கை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை கண்காணித்துவரும் பேஸ்புக் நிறுவனம், இதுதொடர்பான தகவல்களை தனது காலாண்டு நிதிநிலை அறிக்கையில் தவறாமல் குறிப்பிட்டு வருகின்றது.அவ்வகையில் கடந்த ஜூன் மாதம் 968 மில்லியன் பயன்பாட்டாளர்கள் பேஸ்புக் பக்கத்துக்குள் நுழைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தமாத நிலவரப்படி கடந்த திங்கட்கிழமை (23-ம் தேதி) மட்டும் ஒரு பில்லியன் (நூறு கோடி) மக்கள் பேஸ்புக்கை பயன்படுத்தியதாக மார்க் ஜூக்கர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். பூமியில் உள்ள மக்கள் தொகையில் ஏழில் ஒரு பங்கினர் பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்தியதாக தனது பக்கத்தில் அவர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=163939














0 thoughts on “ஒரே நாளில் 100 கோடி பேர் பேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டனர்: மார்க் ஜுக்கர்பெர்க் தகவல்”