மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
By Unknown 9:35 PM
கர்நாடக மாநிலம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலை அணைக்கு வினாடிக்கு 2133 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இது நேற்று காலை 3655 கன அடியாக அதிகரித்தது.இன்று காலை 3910 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 71.67 அடியாக உயர்ந்து உள்ளது. நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.கர்நாடக வனப்பகுதியில் பெய்த தொடர் மழையால் இதுவரை வறண்டு காணப்பட்ட பாலாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.இந்த ஆண்டு பருவ மழை தீவிரம் அடைந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வேண்டியும் அணையில் இருந்து குறித்த நேரத்தில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டியும் பொதுப்பணித்துறை சார்பில் மேட்டூர் அணை முனியப்பன் கோவிலில் இன்று காலை தேங்காய் உடைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.இதையொட்டி அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை நிர்வாக பொறியாளர் சுப்பிரமணி, உதவி நிர்வாக பொறியாளர் வசந்தன், உதவி பொறியாளர்கள் உமா மகேஸ்வரி, மதுசூதனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.சேலத்தில் நேற்று பகல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரவு சுமார் 8.30 மணிக்கு திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இடி மின்னலுடன் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது. சூறாவளி காற்றுக்கு கோரிமேடு, அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி உள்பட சேலத்தின் பல பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.சேலம் கோரிமேடு – ஏற்காடு மெயின் ரோட்டில் ரோட்டோரம் இருந்த புளிய மரம் மின்கம்பிகள் மீது சாய்ந்து விழுந்தது. இதனால் கோரி மேடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது.மேலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இது பற்றி அறிந்ததும் கன்னங்குறிச்சி போலீசார் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினார்கள்.சேலத்தில் நேற்று இரவு பெய்த மழையால் பல இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. பல இடங்களில் இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளானார்கள்.ஏற்காட்டில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் ஏற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் நேற்று இரவு மின்சாரம் இல்லாததால் இருளில் மூழ்கியது.
விடுமுறையை கொண்டாடிய மாணவ-மாணவிகள் இன்று பள்ளிக்கூடங்களுக்கு திரும்புகிறார்கள்!
By Unknown 9:32 PM
தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 45 ஆயிரத்து 366 உள்ளன. இந்த பள்ளிக்கூடங்களில் 87 லட்சத்து 68 ஆயிரத்து 231 மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். மாணவ-மாணவிகள் அனைவருக்கும் தேர்வு நடத்தப்பட்டு கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து இன்று (திங்கட்கிழமை) பள்ளிக்கூடங்கள் திற...
Originally Posted on விடுமுறையை கொண்டாடிய மாணவ-மாணவிகள் இன்று பள்ளிக்கூடங்களுக்கு திரும்புகிறார்கள்!
பாஸ்போர்ட் பெறுவதில் தாமதமா?- புதிய நடைமுறை அறிமுகம்:
By Unknown 9:07 PM
Copy and WIN : http://ow.ly/KNICZ
சவூதியில் வேலை செய்பவர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!
By Unknown 8:56 PM
நாட்டையே உழுக்கிய இந்த கோர சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்த செய்திகள் வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமுக வலைதளங்களில் புகைப்படங்களுடனும், வீடியோகளுடனும் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. இந்த செய்திகளை அங்கு பணிபுரியும் நம்மவர்களும் அதிகம் பகிர்ந்திருந்தனர்.
சவூதியில் அங்குள்ளவர்கள் சமுக வலைதளங்களில் என்னென்ன செய்கிறார்கள் என்பது தீவிரமாக கண்கானிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு செய்திகள் போன்றவற்றை சமுக வலைதளங்களில் பகிர்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்ற தகவல் சவூதியில் பணிபுரியும் அதிரையை சேர்ந்த ஒரு நபர் நமது அதிரை பிறை நிர்வாகிக்கு தொடர்புகொண்டு தெரிவித்தார். எனவே அனைவரும் சற்று எச்சரிக்கையாக சமுக வலைதளங்களை உபயோகிக்குமாறு வி.களத்தூர்,இன் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
மியான்மார் படுகொலைகளின் பின்னணியில் நோர்வே அமெரிக்கக் கூட்டுச் சதி?
By Unknown 1:03 PM
இந்தியப் பழங்குடி மக்கள் மீதான கொலை வெறிக்கு எதிராகப் போராடிய பெண்ணின் உடலை தூக்கிச் செல்லும் சிறப்பு அதிரடிப்படை
உலகம் முழுவதும் பல்தேசிய நிறுவனங்களின் இலாப வெறிக்காகவே ஆளும் வர்க்கங்கள் செயற்படுகின்றன. அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும், இந்திய அரசும் இந்திய மண்ணின் பழங்குடி மக்களை அழித்துக் கனிமவளங்களைக் கொள்ளையடிபதற்கு எதிராக இந்திய மாவோயிஸ்டுக்கள் போராடுவதைக் கேள்வியுற்றிருக்கிறோம். வன்னியில் நடத்தப்பட்ட மனிதப் படுகொலைகளின் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால் பல்தேசிய நிறுவனங்கள் வெளித்தெரியும்.
திருகோணமலையும், மன்னாரும் இன்று பல்தேசிய வியாபார வெறியர்களிடம் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ‘நல்லாட்சி அரசு’ என்ற வெளித்தோற்றம் மக்களுக்கானதல்ல. பன்நாட்டு வியாபாரக் கொள்ளையர்களுக்கானது. வன்னிப் படுகொலைகளின் பின்னர் ஆறு வருடங்களாக, ராஜபக்சவைப் பயன்படுத்தி இலங்கையின் தமது நிலைகளை நிறுவிக்கொண்ட மேற்கு நாடுகளின் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் இன்று மைத்திரிபால சிரிசேனவை ஆட்சிபீடத்தில் அமர்த்தியுள்ளன. இலங்கையில் ராஜபக்ச ஏற்படுத்திய வர்த்தச் சுரண்டல் வெளியைப் பாதுகாப்பதே ‘நல்லாட்சி’ என்ற பெயரில் மைத்திரிபால சிரிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ள பணி.
ராஜபக்ச குடும்பத்தின் தலைமையில் நடத்தப்பட்ட நமது காலத்தின் மிகப்பெரும் மனிதப் பேரவலமான வன்னிப் படுகொலைகளின் பின்னர் இலங்கை சென்ற அமெரிக்க உதவி ராஜாங்க அமைச்சர் ரொபர்ட் ஓ பிளேக் இலங்கை இராணுவத்தை அமெரிக்காவில் பணியில் ஈடுபடுத்துமாறு கோத்தாபய ராஜபக்சவிடம் கோரினார். அதனை நிராகரித்த கோத்தாபய இலங்கை இராணுவம் ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பி வைக்கப்பட்டால் முஸ்லீம்களின் வாக்கை இழக்க நேரிடும் என்று கூறினார்.
அப்போது ராஜபக்ச குடும்பத்தை அகற்றி தமக்கு வேண்டிய இன்னொருவரை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு முஸ்லீம்களின் வாக்குப் பலத்தைக் சிதைக்க வேண்டும் என்பதை அமெரிக்கா புரிந்துகொண்டது.
அதன் பின்னான காலப்பகுதியில் ராஜபக்ச பாசிஸ்ட்டுகளோடு இணைந்து செயற்பட பொதுபல சேனா உருவாக்கப்பட்டது. பொதுபல சேனாவைத் தோற்றுவித்து வளர்த்ததன் பின்னணியில் நோர்வே அரசு செயற்பட்டது.
அதற்கான முழுமையான ஆதாரங்கள் கீழே:
பொது பல சேனா – நோர்வே,அமெரிக்கக் கூட்டுச் சதி – விலகும் மர்மம்
பொதுபல சேனாவின் செயற்பாடுகள் ராஜபக்சவை முழுமையாக முஸ்லீம் மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்படுத்தி சிரிசேன ஆட்சிக்கு வருவதற்குத் துணை சென்றன.
நோர்வே அரசின் நிதி உதவியுடன் தோற்றுவிக்கப்பட்ட பொதுபல சேனாவுடன் மியான்மார் பௌத்த பிக்குவும், ரோகிங்கியா இன முஸ்லீம் படுகொலைகளின் பின்னணியில் செயற்படுபாவர்களில் ஒருவருமான வீராது என்ற பயங்கரவாதி ஒப்பந்தம் ஒன்றை எழுதிக்கொண்டார்.
மியான்மார் பயங்கரவாதி கொழும்பில்
வீராதுவின் 969 என்ற பயங்கரவாத அமைப்பு ராஜபக்சவின் பௌத்த கொலைவெறிக்கும், ஹிட்லரின் கோரத்திற்கும் இணையானது. ஐரோப்பாவில் அமெரிக்க அரசின் கைத்தடியாகப் பயன்படுவது நோர்வே அரசு. இலங்கையில் சமாதானம் என்ற பெயரில் நடத்திய பேச்சுவார்த்தையை இனப்படுகொலை வரை நடத்திச் சென்ற நோர்வே அரசு, பொதுபல சேனாவிற்கு மட்டும் நிதி வழங்கவில்லை. ரோகிங்கியா முஸ்லீம்கள் படுகொலை செய்யப்படும் ராக்கையின் மானிலத்திற்கு நிதி வழங்கும் பிரதான அரசுகளில் நோர்வேயும் ஒன்று.
பௌத்த மத வெறிக்குப் பலியாக்கப்படும் ரோகிங்யா முஸ்லீம்களுக்கு ஆதரவாகப் நிதி உதவி வழங்குவதற்குப் பதிலாக அகதிகளாக வெளியேறும் ரோகிங்யா மக்களைத் தடுப்பதற்காகப் பணம் வழங்குவதாக நோர்வே அரசு அண்மையில் அறிவித்திருந்தது.
ஐ.நா வும் நோர்வேயும் அவ்வப்போது ரோகிங்கியா மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக அவ்வப்போது குரல்கொடுப்பது போல நாடகமாடினாலும், நோக்கங்கள் வேறுபட்டவை.
இலங்கையில் மன்னார் எரிவாயு அகழ்விலும், சம்பூரிலும் முதலிடும் பிரஞ்சு நிறுவனமான டோட்டல் எஸ்.ஏ, (TOTAL S.A) பர்மாவில் அதன் எண்ணை வளக் கொள்ளையை நடத்தி வருகிறது.
மியான்மாரில் எரிவாயுவை உற்பத்தி செய்து அதனை தாய்லாந்து வரை கடத்தி விற்பனை செய்து டோட்டல் நிறுவனம் விற்பனை செய்கிறது. இந்த நிறுவனத்தின் எரிவாயு அகழ்வின் பிரதான மையம் ரக்கையின் மானிலத்திலேயே அமைந்துள்ளது. பல்தேசிய வியாபாரிகளின் எரிவாயுக் கொள்ளைகும் ராக்கைன் மாநிலத்தில் அதிக அளவில் வாழும் முஸ்லீம்களின் படுகொலைக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
தவிர, சீன அரசு மியான்மாரின் இதே மானிலத்திலிருந்து எரிவாயுவை சீனாவிற்குக் கடத்திச் செல்லும் திட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தது. 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டம் முடிவுறும் நிலையிலுள்ளது. இத் திட்டத்திற்கு எதிராக மியான்மார் பௌத்த பிக்குகள் போராட்டங்களை நடத்திவந்தனர்.
பொது பல சேனா, 969 இயக்கம், நோர்வே அரசின் நிதி, எரிவாயு அகழ்வு போன்ற அனைத்தும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையவை. ஆக, பௌத்தத்தின் பெயரால் நடத்தப்படும் படுகொலைகளின் பின்னணியில் நோர்வே அரசினதும் அமெரிக்க அரசினதும் பங்கு ஆராயப்பட வேண்டும்.
இந்த நூற்றாண்டில் அதிக அளவில் படுகொலை செய்யப்படும் மக்கள் கூட்டம் ரோகின்கியா இன மக்கள் என ஐ.நா இன் குறிப்பு ஒன்று தெரியப்படுத்துகிறது. மேற்கு ஏகாதிபத்தியங்களின் அடியாளான ஆன் சாங் சுகி இன் ஜனநாயகம் ரோகிங்கியா முஸ்லீம்களைப் பற்றி மூச்சுக் கூட விடுவதில்லை கடந்த சில வாரங்களாக நிராயுதபாணிகளான அப்பாவி முஸ்லீம்கள் கொத்துக்கொத்தாகப் படுகொலை செய்யப்படுகின்றனர். அப்பாவிப் பெண்கள் கர்ப்பிணைத் தாய்மார்கள் முதியவர்கள் மூலையில் முடக்கி வைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றனர்.
ரோகிங்கியா முஸ்லீம்கள் வரலாற்றில் தடம் தெரியாது அழிக்கப்படும் நிலை தோன்றியுள்ளது. இதற்கு எதிரான போராட்டம் என்பது பல்தேசிய நிறுவனங்களின் வர்த்த வெறிக்கு எதிரான போராட்டமாகவும், ஏகாதிபத்தியங்களின் தலையீட்டுக்கு எதிரான போராட்டமாகவும் அமைய வேண்டும்.
http://www.sundaytimes.lk/140518/news/french-oil-giant-to-explore-n-e-seas-99592.html
http://reliefweb.int/report/myanmar/norway-provide-additional-nok-10-million-humanitarian-aid-rakhine-state-myanmar
http://burma.total.com/myanmar-en/oil-and-gas-in-myanmar/oil-and-gas-in-myanmar-900130.html
http://www.rfa.org/english/news/myanmar/pipeline-04182013175129.html
abivai