ANNA UNIVERSITY EXAM TIMETABLE FOR B.E. / B.TECH. / B.ARCH. DEGREE PROGRAMMES NOVEMBER/DECEMBER-2015 EXAMINATIONS
புதிய கால அட்டவணை வெளியீடு...நாளை முதல் அமல்.. பல ரயில்களின் நேரம் மாறுகிறது
சென்னை: தெற்கு ரயில்வே உள்ளடக்கிய தென் மண்டலத்திற்கான புதிய ரயில்வே கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.அக்டேபாபர் 1-ம் தேதி அதாவது நாளை முதல் ரயில்களின் வருகை ,புறப்படும் நேரம், மாற்றப்பட்ட ரயில்களின் விவரம் பின்வருமாறு ...சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்:சென்னை சென்ட்ரலில் இருந்து இனி தன்பாத்-ஆலப்புழை எக்ஸ்பிரஸ் அதிகாலை 3.25 மணிக்கு பதில் அதிகாலை 2 மணிக்கும், கவுகாத்தி-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், கவுகாத்தி-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ஆகியவை அதிகாலை 4.45 மணிக்கு பதில் அதிகாலை 4.55 மணிக்கும், சென்னை-விஜயவாடா ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் காலை 7.30 மணிக்கு பதிலாக காலை 7.35 மணிக்கும், சென்னை -சந்திரகாசி எக்ஸ்பிரஸ் காலை 7.55 மணிக்கு பதிலாக காலை 8.10 மணிக்கும், சென்னை - ஊப்ளி எக்ஸ்பிரஸ், சென்னை - வாஸ்கோடாகாமா எக்ஸ்பிரஸ் ஆகியவை பகல் 1.50 மணிக்கு பதில் 1.45 மணிக்கும், சென்னை - திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் பகல் 2.10 மணிக்கு பதில் 2.15 மணிக்கும், சென்னை - ஆல்டியா எக்ஸ்பிரஸ், சென்னை- அசன்ேசால் எக்ஸ்பிரஸ் ஆகியவை பகல் 2.35 மணிக்கு பதில் 2.40 மணிக்கும், தர்பங்கா-மைசூர் எக்ஸ்பிரஸ், பாடலிபுத்திரம் -யஸ்வந்த்புரம் எக்ஸ்பிரஸ் ஆகியவை பகல் 2.40 மணிக்கு பதில் பகல் 2.45 மணிக்கும், பெங்களூர் - பாட்னா சங்கமித்ரை எக்ஸ்பிரஸ் பகல் 3.40 மணிக்கு பதிலாக 3.45 மணிக்கும் சென்னை-அவுரா வாராந்திர எக்ஸ்பிரஸ் மாலை 5.10 மணிக்கு பதிலாக மாலை 5.20 மணிக்கும், சென்னை - நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ் மாலை 6.15 மணிக்கு பதில் மாலை 6.20 மணிக்கும், சென்னை-மங்களூர் மெயில் இரவு 8.15 மணிக்கு பதில் இரவு 8.20 மணிக்கும், சென்னை- பழனி எக்ஸ்பிரஸ் இரவு 9.30 மணிக்கு பதிலாக இரவு 9.40 மணிக்கும், சென்னை-அவுரா மெயில் இரவு 11.40 மணிக்கு பதிலாக இரவு 11.45 மணிக்கும், கொரக்பூர்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், பரோனி- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், இந்தூர்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், கோர்பா-திருவனந்தபுரம ்எக்ஸ்பிரஸ் ஆகியவை இரவு 11.45 மணிக்கு பதிலாக இரவு 11.50 மணிக்கும் புறப்பட்டுச் செல்லும்.சென்னை சென்ட்ரலுக்கு வரும் ரயில்களின் நேரம் மாற்றம்:சென்னை சென்ட்ரலுக்கு இனி தன்பாத்-ஆலப்புழை எக்ஸ்பிரஸ் அதிகாலை 2.55 மணிக்கு பதிலாக 1.55 மணிக்கும், அவுரா- சென்னை மெயில் அதிகாலை 3.50 மணிக்கு பதிலாக அதிகாலை 3.45 மணிக்கும், கவுகாத்தி -பெங்களூர், கவுகாத்தி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அதிகாலை 4.20 மணிக்கு பதிலாக அதிகாலை 4.30 மணிக்கும், பெங்ளூர் - சென்னை மெயில் அதிகாலை 4.40 மணிக்கு பதிலாக அதிகாலை 4.45 மணிக்கும், புதுடெல்லி-சென்னை ஜிடி எக்ஸ்பிரஸ் காலை 6.15 மணிக்கு பதிலாக காலை 6.20 மணிக்கும், கோவை-சென்னை வாராந்திர எக்ஸ்பிரஸ், மதுரை-சென்னை துரந்தோ எக்ஸ்பிரஸ் ஆகியவை காலை 7.15 மணிக்கு பதிலாக காலை 7.20 மணிக்கும், ஜோலார்பேட்டை-சென்னை ஏலகிரி எக்ஸ்பிரஸ் காலை 9.15 மணிக்கு பதிலாக காலை 9.10 மணிக்கும், விசாகப்பட்டினம்-சென்னை எக்ஸ்பிரஸ் காலை 9.35 மணிக்கு பதிலாக காலை 9.30 மணிக்கும், பிகானீர்-சென்னை எக்ஸ்பிரஸ் காலை 9.55 மணிக்கு பதிலாக காலை 10.10 மணிக்கும் ஜம்முதாவி(வைஷ்ணவிதேவி)-சென்னை எக்ஸ்பிரஸ் காலை 10.10 மணிக்கு பதிலாக காலை 10.20 மணிக்கும், திருவனந்தபுரம்-சென்னை ஏசி ரயில் காலை 10.30 மணிக்கு பதிலாக காலை 10.35 மணிக்கும், பிட்ரகுண்டா-சென்னை பாசஞ்சர் ரயில் பகல் 12 மணிக்கு பதிலாகபகல் 12.35 மணிக்கும், லோக்மான்யதிலக்(மும்பை) - சென்னை எக்ஸ்பிரஸ் காலை 1.05 மணிக்கு பதிலாக 1.10 மணிக்கும், பாட்னா-பெங்களூர் சங்கமித்ரை எக்ஸ்பிரஸ் பகல் 3.05மணிக்கு பதிலாக 3.15 மணிக்கும், மும்பை-சென்னை எக்ஸ்பிரஸ் மாலை 4.45 மணிக்கு பதிலாக 4.30 மணி்க்கும், நாகர்சோல்-சென்னை எக்ஸ்பிரஸ் மாலை 4.15 மணிக்கு பதிலாக 4.45 மணிக்கும், அகமதாபாத் - சென்னை வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் மாலை 5.05 மணிக்கு பதிலாக5.10 மணிக்கும், அவுரா- சென்னை எக்ஸ்பிரஸ் மாலை 5.15 மணிக்கு பதிலாக 5.20 மணிக்கும், பெங்களூர்- சென்னை இரண்டு அடுக்கு ஏசி ரயில் இரவு 8.35 மணிக்கு பதிலாக இரவு 8.30 மணிக்கும், திருப்பதி-சென்னை சப்தகிரி எக்ஸ்பிரஸ் இரவு 9.35 மணிக்கு பதிலாக இரவு 9.45 மணிக்கும் வந்து சேரும். சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்:சென்னை எழும்பூரில் இருந்து இனி சென்னை-கயா எக்ஸ்பிரஸ் காலை 7.30 மணிக்கு பதிலாக காலை 7 மணிக்கும், புதுச்சேரி-புதுடெல்லி எக்ஸ்பிரஸ் , ராமேஸ்வரம்-மந்துதீன் எக்ஸ்பிரஸ் ஆகியவை பகல் 1.15 மணிக்கு பதிலாக பகல் 1.00 மணிக்கும், சென்னை-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் பகல் 3.15 மணிக்கு பதிலாக பகல் 3.10 மணிக்கும், பகத்-கி-கோதி(ஜோத்பூர்)-மன்னார்குடி எக்ஸ்பிரஸ் இரவு 7.55 மணிக்கு பதிலாக இரவு 7.50 மணிக்கும் புறப்படும்.சென்னை எழும்பூர் வந்து சேரும் ரயில்களின் நேரம் மாற்றம்:சென்னை எழும்பூருக்கு இனி காச்சிகுடா-சென்னை எக்ஸ்பிரஸ் காலை 7.15மணிக்கு பதிலாக காலை 7.25 மணிக்கும், புதுச்சேரி-புதுடெல்லி எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்-மந்துதீன் எக்ஸ்பிரஸ் பகல் 1.00 மணிக்கு பதிலாக பகல் 12.40 மணிக்கும மன்னார்குடி- பகத்-கி-கோதி எக்ஸ்பிரஸ் இரவு 7.30 மணிக்கு பதிலாக இரவு 7.25 மணிக்கும், அவுரா-திருச்சி எக்ஸ்பிரஸ், அவுரா-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஆகியவை இரவு 7.55மணிக்கு பதிலாக இரவு 7.50 மணிக்கும், புதுச்சேரி-சென்னை எக்ஸ்பிரஸ் இரவு 8.30 மணிக்கு பதிலாக இரவு 8 மணிக்கும், கயா-சென்னை எக்ஸ்பிரஸ் இரவு 8.45 மணிக்கு பதிலாக இரவு 8.30 மணிக்கும், காரைக்கால்-லோக்மான்யதிலக்(மும்பை) எக்ஸ்பிரஸ் இரவு 10.10 மணிக்கு பதிலாக இரவு 10 மணிக்கும் வந்து சேரும்.
Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=170195
அகமதாபாத்தில் இஸ்லாமிய பெண் போல் புர்கா அணிந்து மாட்டு இறைச்சி வீசி மாட்டிக்கொண்ட இளைஞர்!
ஆன்லைன் மூலம் தரமில்லாத பொருட்களை வாங்கி ஏமாற வேண்டாம்: அரசு முதன்மை செயலாளர் அறிவுரை
ஈரோடு செப். 29–
ஈரோடு மாவட்ட நுகர்வோர் மையம் சார்பில் நுகர்வோர் காவலன் வெள்ளி விழா ஈரோட்டில் மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது. நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் எஸ்.கே.எம் மயிலானந்தன் வரவேற்றார்.
விழாவில் தமிழக அரசின் முதன்மை செயலர் மற்றும் உணவு மற்றம் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் கோபாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார்
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யவும் சில மாற்றம் கொண்டு வரவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தங்களது ஆலோசனைகளை பொதுமக்கள் இணையதளம் மூலம் தெரிவிக்கலாம்.
பொதுமக்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வை வாட்ஸ் ஆப் போன்ற தொழில் நுட்பங்கள்மூலம், தெரிவிக்கலாம். சமீப காலமாக இணையதளம் மூலம் பொதுமக்கள் பொருட்களை பதிவு செய்து வாங்குகிறார்கள். இந்த பொருட்கள் பற்றிய தரம் மற்றும் பாதுகாப்பு பற்றி நாம் தெரிந்து கொள்ள முடிவதில்லை. இதுபோல இணைய தளம் மூலம் பொருட்களை வாங்கும் போது பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
படித்தவர்கள் கூட செல்போனில் வரும் குறுந்தகவல்களை நம்பி பாங்கியில் உள்ள பணத்தை ஏமாறும் நிலை உள்ளது. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி ஏமாற்றுபவர்களிடம் இருந்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்,
இவ்வாறு அவர் பேசினார்.
விழா மலரை முதன்மை செயலர் கோபால கிருஷ்ணன் வெளியிட அதை கலெக்டர் பிரபாகர் பெற்று கொண்டார்.
விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி சதீஷ், மாவட்ட வழங்கல் அதிகாரி ஸ்டெல்லா ராணி, ஈரோடு ஆர்.டி.ஓ நர்மதா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் பால சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
Link: http://www.maalaimalar.com/2015/09/29171622/Online-through-do-not-be-decei.html
குடும்பத்திற்கு ஒரு கார் : கெஜ்ரிவாலின் அடுத்த அதிரடி
2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கில் கராத்தே, பேஸ்பால் உள்பட 5 போட்டிகளை சேர்க்க சிபாரிசு
கொழுப்பைக் குறைக்கும் பீட்ரூட்
பீட்ரூட்டின் சிவப்பு நிறம், அதில் நிரம்பியுள்ள சத்துகளின் அடையாளம். மண்ணுக்கு அடியில் விளையும் இந்தக் காய் தரும் பலன்கள் என்ன? பார்ப்போம்:
l பீட்ரூட் சிவப்பாக இருப்பதற்கும், அது கையில் ஒட்டிக்கொண்டால் போகாமல் இருப்பதற்கும் காரணம் பீட்டா சயனின் என்ற வேதிப்பொருள், இது மிக நல்ல ஆன்ட்டி ஆக்சிடண்ட்.
l பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து அதிகம். எனவே, தொடர்ச்சியாகப் பீட்ரூட் சாப்பிட்டுவந்தால் மூளைத்தாக்கு (ஸ்டிரோக்), ரத்த அழுத்தத்தைத் தள்ளி வைக்கலாம்.
l மூளைக்கு ரத்தம் செல்வதைப் பீட்ரூட் மேம்படுத்துகிறது. அதனால், மூப்புமறதி (டிமென்ஷியா) பாதிப்பு குறையும்.
l அதேபோல பீட்ரூட்டைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடலில் கெட்ட கொழுப்பு சேரும் விகிதத்தைக் குறைக்கலாம்.
l எந்த ஒரு உடல் உழைப்பு சார்ந்த செயல்பாட்டைச் செய்வதற்கு முன்னதாகவும் ஒரு குவளை பீட்ரூட் ஜூஸைக் குடித்தால், உற்சாகமாக வேலை செய்வதற்கான சக்தியை அது கொடுத்துவிடும்.
- நேயா
Link: http://tamil.thehindu.com/general/health/கொழுப்பைக்-குறைக்கும்-பீட்ரூட்/article7692155.ece
மலேசியா நாட்டின் பினாங்கில் இருந்து திருச்சிக்கு நேரடி விமான போக்குவரத்து சேவை
மலேசியா நாட்டின் பினாங்கில் இருந்து திருச்சிக்கு நேரடி விமான போக்குவரத்து இன்று இரவு முதல் தொடங்குகிறது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
திருச்சி விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு வசதிகள், பயணிகளின் வரவேற்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, தனியார் நிறுவனங்களின் பன்னாட்டு விமான சேவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மலேசியா நாட்டில் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் பினாங்கில் இருந்து திருச்சிக்கு விமான சேவையை மலிண்டோ நிறுவனம் இன்று முதல் தொடங்க உள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் துவக்க விழாவில் மலேசியா நாட்டின் சுற்றுலாத்துறை இயக்குநர் நூர் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
Link: http://www.dinamani.com/latest_news/2015/09/26/மலேசியா-நாட்டின்-பினாங்கில/article3048730.ece
வீட்டு மொட்டைமாடியில் மாட்டுத் தொழுவம்:
By Unknown 9:35 AM agri , world
உலகெங்கும் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடியுள்ள நிலையில், அவரது தொழுவத்தில் பிறந்த கன்றுக் குட்டிகளில் ஒன்று ஹஜ் பெருநாளை அடுத்துவரும் குர்பானிக்காக பலிகொடுக்கப்பட உள்ளது.
மாடுகளின் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும் அவருக்கு இது மிகுந்த சோகத்தை கொடுத்துள்ளது.
அவரது கதையை இங்கு காணொளியில் காணலாம்.
செப்.28-ல் அமெ.துணைத்தூதரகம் முற்றுகை: மதிமுக, விசிக உட்பட 29 அமைப்புகள் அறிவிப்பு
செப்.28-ல் அமெ.துணைத்தூதரகம் முற்றுகை: மதிமுக, விசிக உட்பட 29 அமைப்புகள் அறிவிப்பு தமிழீழ இனப்படுகொலையை மறைத்து, கொலைகார இலங்கை அரசையே நீதிபதியாக்கும் வகையில், ஐநா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்க அரசு தீர்மானம் கொண்டுவருவதைக் கண்டித்து, மதிமுக, விசிக, மமக கட்சிகள் உட்பட 29 தமிழர் அமைப்புகள் சார்பில், வரும் 28-ம் தேதியன்று சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத்தூதரக முற்றுகைப் போராட்டம் நடத்தப்படுகிறது. மதிமுக பொதுச்செயலர் வைகோ, மமக துணைத்தலைவர் குணங்குடி அனீஃபா, வழக்கறிஞர் அங்கயற்கண்ணி ஆகியோர், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தனர். ”தமிழர்கள் அமெரிக்கா சொல்லும் உள்நாட்டு பொறி முறையையோ அல்லது உள்நாட்டு பொறி முறையின் இன்னொரு வடிவமான கலப்பு பொறிமுறையையோ ஏற்றுக்கொள்ளவில்லை” என்பதை வெளிப்படுத்தவும் ”ஐ.நா அமைப்பானது, 1948 முதல் தற்போது வரை ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையும்,தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பையும் உடனே நடத்தவேண்டும்” என வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக தலைவர்கள் தெரிவித்தனர்.பங்கேற்கும் கட்சிகள் மற்றும் அமைப்புகள்.1.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (மதிமுக)2.தமிழர் தேசிய முன்னனி3.தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் (த.மு.மு.க)4.சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI)5.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி6.தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்7.தந்தை பெரியார் திராவிடர் கழகம்8.தமிழ்த் தேசிய பேரியக்கம்9.தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்10.திராவிடர் விடுதலை கழகம் 11.புரட்சிகர இளைஞர் முன்னணி 12.தமிழர் விடுதலைக் கழகம் 13.தமிழர் விடியல் கட்சி 14.தமிழ்ப் புலிகள் கட்சி 15.விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி16.காஞ்சி மக்கள் மன்றம்17.வழக்கறிஞர் கயல் (எ) அங்கயற்கண்ணி18.அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம்19.தமிழ்த்தேசக் குடியரசு இயக்கம்20.மக்கள் விடுதலை இயக்கம்21.மறுமலர்ச்சி நாம் தமிழர் கட்சி 22.தமிழர் நலன் இயக்கம்23.மக்கள் நலன் இயக்கம்24.இளைய தலைமுறை கட்சி25.தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு26.தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர் கூட்டமைப்பு27.மாற்றம்- இளையோர் மாணவர் இயக்கம்28.பாலசந்திரன் மாணவர் இயக்கம்29.மே 17 இயக்கம்
Link: http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=151831
ஓடு பாதையில் சென்ற போது துபாய் விமானத்தில் எந்திரக் கோளாறு
By Unknown 3:28 AM tamilnadu , world
ஆலந்தூர், செப். 25–
சென்னை, சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் துபாய் செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது. 320 பயணிகள் அதில் இருந்தனர்.
ஓடு பாதையில் விமானம் சென்ற போது எந்திரத்தில் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்ததார். இதையடுத்து விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே நிறுத்தப்பட்டது.
என்ஜினீயர்கள் வரவழைக்கப்பட்டு கோளாறு சரி செய்யப்பட்டது. இதையடுத்து சுமார் 5 மணி நேரம் தாமதமாக காலை 10.30 மணிக்கு துபாய் விமானம் புறப்பட்டு சென்றது.
Link: http://www.maalaimalar.com/2015/09/25143702/When-I-went-to-the-runways-ele.html
மினா விபத்தில் தமிழத்தை சேர்ந்த இருவர் மரணம் !
மினா கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு ஹாஜி ஷஹீத்!
மெக்கா கூட்ட நெரிசல் சிக்கி மூன்று இந்தியர்கள் பலி: உயிரிழந்தவர்காளின் எண்ணிக்கை 717 ஆக உயர்வு
FLASH NEWS : இன்று காலை மக்காவில் மி்னா என்ற இடத்தில் கூட்ட நொிசலில் சிக்கிய ஹஜ் பயணாளிகள் 310, மரணம் 500க்கு மேற்பட்டோா்கள் படுகாயம்

மினாவில் கல் எரியும் நிகழ்வில் போது கூட்ட நெரிசலில் 310பேர் பலி 500 பேர் படுகாயம் அடைந்து உள்ள நிலையில் மீட்பு பணிக்காக மருத்துவர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளனர். மேலும் சில நாட்களுக்கு முன்பு மக்காவில் பலத்த காற்று வீசியதன் காரணமாக கட்டுமான பணியில் இருந்த ராட்சத கிரேன் முறிந்து விழுந்து 107 பலியானது குறிப்பிடத்தக்கது.

Media7
ஜப்பானில் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கை சிறுநீரகம்: எலி–பன்றியிடம் நடத்திய சோதனை வெற்றி
By Unknown 3:58 AM MEDICAL , world











abivai