லண்டன், செப். 19- செல்லப் பிராணிகளுக்காக நீங்கள், கடைசியாக என்ன செய்தீர்கள்? என்ன செய்திருந்தாலும், அது இந்த பிராணிகளின் பிரியருக்கு ஈடாகாது. ஐந்து பூனைகள், இரண்டு நாய்கள் என ஏழு செல்லப் பிராணிகளுடன் உறங்குவதற்காக 75 சதுர அடியில் பிரம்மாண்ட படுக்கையை பிரத்யேகமாக தயார் செய்துள்ள நபர் பலரின் பாராட்டுக்கும், சிலரின் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளார். தூக்கம், அதுவும் பிடித்தவருடன் ஆசையாக கொஞ்சிக் கொண்டே தூங்க, யாருக்குத் தான் ஆசை இருக்காது? ராப் என்கிற நபர் தனது துணைவி மற்றும் செல்லப் பிராணிகளுடன் ஒன்றாக இருக்க இந்த மாபெரும் முடிவை எடுத்துள்ளார். அவரது மொத்த குடியிருப்பின் அதிகபட்சமான இடத்தை இந்த படுக்கைதான் ஆக்கிரமித்திருக்கின்றது. ஒரு பொமேரியன் நாய்க் குட்டியுடன் சேர்த்து உடலின் மீது நிறைய ரோமம் கொண்ட, இந்த செல்லப்பிராணிகள் படுக்கும் படுக்கைகளை நாள்தோறும் துவைக்க வேண்டும்! எனினும், அது ஒன்றும் கடினமில்லை! இதற்கு பரிசாகத்தான்.. செல்லப் பிராணிகளின் கொஞ்சல் கிடைத்துள்ளது என்கிறார் ராப்!
Link: http://www.maalaimalar.com/2015/09/19171757/Man-creates-a-75-sq-ft-mega-be.html













0 thoughts on “7 செல்லப் பிராணிகளுடன் தூங்குவதற்காக 75 சதுர அடியில் பிரமாண்ட படுக்கை தயார் செய்த வாலிபர்”