புதுடெல்லி: செல்போனில் பேசி கொண்டிருக்கும் போது திடீரென அழைப்பு துண்டிக்கப்பட்டால் அதற்குரிய கட்டணத்தை வசூலிக்க கூடாது என்று இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (TRAI) அறிவித்துள்ளது. செல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போது, சிக்னல் கோளாறு காரணமாக பேசுவதில் தடை ஏற்படுவது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நிகழும் வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது.இந்தப் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காணமாறு பிரதமர் மோடி அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.இது குறித்து பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்ட டிராய் அதன் அடிப்படையில், தனது பரிந்துரை அறிக்கையை அளித்துள்ளது. இதில், செல்போனில் ஒருவர் பேசி கொண்டிருக்கும் போது, திடீரென தடை ஏற்பட்டால் கட்டணம் வசூலிக்க கூடாது. அதன் தடையை ஈடு செய்ய இலவசமாகக் கூடுதல் நேரத்தை ஒதுக்க வேண்டும், அல்லது கட்டணத்தைத் திருப்பி செலுத்திவிட வேண்டும். அழைப்பு வந்த முதல் 5 விநாடிகளிலேயே தடைபட்டால் அந்த அழைப்புக்கு, கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் பல்வேறு முக்கிய பரிந்துரைகளை டிராய்தெரிவித்துள்ளது.
Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=165395













0 thoughts on “செல்போனில் பேசிக் கொண்டிருக்கும்போது அழைப்பு துண்டிக்கப்பட்டால் கட்டணம் கூடாது: டிராய்!!”