இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று துறை போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற இருக்கிறது. டெஸ்ட் போட்டிகள் அக்டோபர் 13-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்தேதி வரையும், ஒருநாள் தொடர் நவம்பர் மாதம் 11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையும், டி20 தொடர் 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையும் நடைபெற இருக்கிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்:- அலைஸ்டர் குக் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், சபர் அன்சாரி, ஜோனி பேர்ஸ்டோவ், இயான் பெல், ஸ்டூவர்ட் பிராட், ஜோஸ் பட்லர், ஸ்டீவன் பின், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளங்கெட், அதில் ரஷித், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் டெய்லர், மார்க் வுட் ஒருநாள் தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள்:- மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜோனி பேர்ஸ்டோவ், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், ஸ்டீவன் பின், அலெக்ஸ் ஹேல்ஸ், அதில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், ஜேம்ஸ் டெய்லர், ரீசெ டாப்லெய், டேவிட் வில்லே, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் டி20 தொடருக்கான அணி வீரர்கள் விவரம்:- மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, சாம் வில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டான், ஸ்டீபன் பார்ரி, அதில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், டாப்லேய், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லே, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்சுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மொயீன் அலி, அன்சாரி ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். தொடக்க வீரர் லைத் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அந்த அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஸ்ட்ராஸ் ஓய்வு பெற்ற பிறகு 7 தொடக்க வீரர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
Link: http://www.maalaimalar.com/2015/09/15213951/Hales-Ansari-Taylor-earn-Test.html













0 thoughts on “பாகிஸ்தான் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு: ஒருநாள் தொடரில் பென் ஸ்டோக்சுக்கு ஓய்வு”