BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 33 ஆயிரத்து 326 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு

சேலம், செப் 15–

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளின் வரைவு வாக்காளர்கள் பட்டியலை மாவட்ட கலெக்டர் சம்பத் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் வெளியிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:–

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 3135 வாக்குச்சாவடிகளில் நகர பகுதிகளில் 1400–க்கு மேலும், கிராம பகுதியில் 1200–க்கு மேலும் வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதியதாக 98 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி சேலம் மாவட்டத்தில் மொத்தம் 3233 வாக்குச்சாவடிகள் உள்ளது. கடந்த 1.1.2015 அன்று ஆண் வாக்காளர்கள் 13,76,720 பேரும், பெண் வாக்காளர்கள் 13,52,603 பேரும், மற்றவர்கள் 225 என 27,29,548 வாக்காளர்கள் இருந்தனர்.

பின்னர் நடந்த பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம், முகவரி திருத்தம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது சேலம் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 13,91,382பேரும், பெண் வாக்காளர்கள் 13,71,256 பேரும், மற்றவர்கள் 236 ஆக மொத்தம் 27,62,874 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 14,662 பேரும், பெண் வாக்காளர்கள் 18,653பேரும், மற்றவர்கள் 11பேரும் என 33326 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முறை நடைபெற உள்ளது. நாளையும், வருகிற 30–ந்தேதியும் சிறப்பு கிராம சபை கூட்டம் கிராமங்களில் நடக்க இருக்கிறது. இதில் அந்தந்த கிராமத்திற்குண்டான வரைவு வாக்காளர் பட்டியல் படிக்கப்பட உள்ளது.

இதுதவிர வருகிற 20–ந்தேதியும், அடுத்த மாதம் 4–ந்தேதியும் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம் நடக்க இருக்கிறது. இந்த முகாம்களில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், முகவரி திருத்தம் போன்றவற்றிற்கு விண்ணப்பங்கள் பெறப்படும்.

சம்பந்தப்பட்ட உதவி வாக்காளர் பதிவு அதிகாரி மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் 11.1.2016 அன்று வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) ராஜசேகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தமிழ்ராஜன் தேர்தல் தாசில்தார் பிரகாஷ், மக்கள் தொடர்பு அதிகாரி கலைஅரசன் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட சேலம் மாநகர திமுக செயலாளர் எஸ்.டி.கலையமுதன் கூறியதாவது:–

அனைத்து கட்சியினருக்கும் வரைவு வாக்காளர் பட்டியல் தரப்படும் என தெரிவித்து இருந்தனர். ஆனால் வரைவு வாக்காளர் பட்டியல் தரவில்லை. இந்த பட்டியல் இருந்தால் தான் சேர்க்கப்பட்டவர்கள் பெயர், நீக்கப்பட்டவர்கள் பெயர் சரியாக உள்ளதா? என பார்க்க முடியும். இதை அதிகாரிகள் கருத்தில் கொண்டு உடனே வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து கட்சியினருக்கும் வழங்க வேண்டும். போலி வாக்காளர்கள் இருந்தால் அவர்களை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Link: http://www.maalaimalar.com/2015/09/16191804/The-addition-of-new-voters-in.html


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 33 ஆயிரத்து 326 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு