இலங்கை போர் குற்றம் தொடர்பாக உள்நாட்டு விசாரணை போதும் என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டை கண்டித்து, கோவையில் நாம் தமிழர் கட்சியினர் கே.எப்.சி நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை அரசு மீது இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்தக் கோரி, தமிழ் அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இலங்கை மீது சர்வதேச விசாரணை தேவையில்லை என்றும், உள்நாட்டு விசாரணை போதும் என்றும் நிலைப்பாட்டை அமெரிக்க அரசு எடுத்துள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, நாம் தமிழர் கட்சியினர் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் செயல்படக் கூடாது என கூறி கே.எப்.சி. நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Link: http://www.ns7.tv/ta/node/125965













0 thoughts on “கோவையில் கே.எப்.சி நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்”