பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு தொடக்கம்
By Unknown 10:18 PM
தமிழகத்தில், நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான இந்த கலந்தாய்வு ஜூலை 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்கள் பெற்ற மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் வழங்க உள்ளார். இன்று 2 மாணவர்கள் கலந்தாய்வுக்காக அழைக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் அமர்ந்து கல்லூரி நிலவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் மிகப் பெரிய கணினி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தை கட்டுப்படுத்த நீண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்காக ஓய்வறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு முதல் உதவி அளிப்பதுடன், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வசதியாக தயார் நிலையில் ஆம்புலன்சும் வைக்கப்பட்டுள்ளது. புகார் ஏதேனும் தெரிவிக்க விரும்புபவர்கள், கலந்தாய்வு அரங்குக்கு அருகில் உள்ள காவல்துறை பூத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வையொட்டி, பல்கலைக் கழக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். Link: http://www.ns7.tv/ta/node/77221 via http://j.mp/tamil_news
தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம்
By Unknown 10:16 PM
இருசக்கரவாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் 1) சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில் 3ல் ஒரு பங்கினர் இருசக்கர வாகனதாரர்கள் 2) சாலை விபத்தில் பாதிக்கப்படுவர்களில் கிட்டத்தட்ட 90% இருசக்கர வாகனதாரர்கள் 3) ஹெல்மெட் அணிவதன் மூலம் 20 முதல் 30 % உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் 4) ஹெல்மெட் அணிந்தவர்களை விட, அணியாதவர்கள் உயிரிழக்க 3 மடங்கு வாய்ப்புள்ளது 5) சாலை விபத்துகளில் சிக்குபவர்கள் உயிரிழப்பது பெரும்பாலும் தலைக்காயத்தால் நிகழ்கிறது 6) ஆபத்தான தலைக்காயங்கள் குறைந்த வேகத்தில் (10/15 கி.மீ) செல்லும் போதும் ஏற்படலாம் Link: http://www.ns7.tv/ta/node/77120 via http://j.mp/tamil_news
ஹெல்மெட் இன்று முதல் அவசியம்: மீறினால் ஆவணங்கள் பறிமுதல்!
By Unknown 10:13 PM
ஹெல்மெட் இன்று முதல் அவசியம்: மீறினால் ஆவணங்கள் பறிமுதல்! (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சென்னை: தமிழகத்தில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டிச் செல்வது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதை மீறி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றால் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கைப்பட்டு உள்ளது. இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என்று சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி தமிழக அரசும் அரசாணை வெளியிட்டது. அதன்படி, இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதுடன், உடன் பயணிப்பவர்களும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும், ஹெல்மெட் அணியத் தவறினால், இருசக்கர வாகனத்தின் ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யடும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அது, இன்று முதல் அமலுக்கு வருகிறது. காவல்துறையினரிம் கெடுபிடிகளுக்கும், வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்பதாலும் இன்று காலை முதலே பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்தபடியே இருசக்கர வாகனங்களில் பயணிக்கின்றனர். பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்து செல்லும்போதும், வெளியே கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும்போதும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்தபடியே சாலையில் பயணிப்பதை காண முடிகிறது. ஆனாலும், அரசின் உத்தரவை மீறி ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை சாலைகளில் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். Link: http://www.vikatan.com/news/article.php?aid=48807 via http://j.mp/tamil_news
ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி: இளங்கோவன் பங்கேற்பு
By Unknown 10:13 PM
சென்னை, ஜூலை.1– தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:– தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) மாலை 5.30 மணியளவில் சென்னை எழும்பூர், சிராஜ் மகாலில் நடைபெறுகிறது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தலைமை தாங்குகிறார். முன்னாள் எம்.பி. ஆரூண் முன்னிலை வகிக்கிறார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் நல்லக்கண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. சவுந்தரராஜன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத் தலைவர் ஹைதர்அலி, எஸ்.டி.பி.ஐ. தலைவர் டெக்லான் பாகவி ஆகிய கட்சித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருநாவுக்கரசு, குஷ்புசுந்தர், யசோதா, செல்வப்பெருந்தகை ஆகியோர் பங்கேற்கிறார்கள். சென்னை, திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் வரவேற்புரை நிகழ்த்துகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. Link: http://www.maalaimalar.com/2015/07/01094843/Ramadan-fasting-opening-event.html via http://j.mp/tamil_news
பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்குகிறது
By Unknown 1:52 PM
தமிழகத்தில், நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான இந்த கலந்தாய்வு ஜூலை 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. பொது கலந்தாய்வுக்கு தினமும் சுமார் 6 ஆயிரம் மாணவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் அமர்ந்து கல்லூரி நிலவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் மிகப் பெரிய கணினி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தை கட்டுப்படுத்த நீண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்காக ஓய்வறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு முதல் உதவி அளிப்பதுடன், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வசதியாக தயார் நிலையில் ஆம்புலன்ஸும் வைக்கப்பட்டுள்ளது. புகார் ஏதேனும் தெரிவிக்க விரும்புபவர்கள், கலந்தாய்வு அரங்குக்கு அருகில் உள்ள காவல்துறை பூத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வையொட்டி, பல்கலைக் கழக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். Link: http://www.ns7.tv/ta/node/77105 via http://j.mp/tamil_news
ஜிம்பாப்வே தொடருக்கு கேப்டன்: ரஹானேவுக்கு, தெண்டுல்கர் பாராட்டு
By Unknown 1:51 PM
புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணி வருகிற 7–ந்தேதி முதல் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணியில் கேப்டன் டோனி, துணை கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா உள்பட 6 சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணிக்கு 27 வயதான மும்பையைச் சேர்ந்த அஜிங்யா ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். மும்பையை சேர்ந்த ஒருவர் இந்திய அணியை வழிநடத்த இருப்பது 15 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும். கடைசியாக மும்பையைச் சேர்ந்த சச்சின் தெண்டுல்கர் 2000–ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார்.இந்த நிலையில் புதிய கேப்டன் ரஹானேவுக்கு, கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெண்டுல்கர் கூறுகையில், ‘ரஹானேவை நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ஒரு நேர்மையான, கடினமாக உழைக்கக்கூடிய கிரிக்கெட் வீரர். அவரது பங்களிப்பும், அர்ப்பணிப்பு உணர்வும் என்னை எப்போதும் கவர்ந்த ஒரு விஷயம். அவர் தனது மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து, பெருமிதம் கொள்ளச் செய்வார் என்று உறுதியாக நம்புகிறேன். அணியை திறம்பட வழிநடத்த வாழ்த்துகள்’ என்றார். Link: www.DailyThanthi.com/Sports/Cricket/2015/07/01014307/Zimbabwe-captain-for-the-seriesFor-Rahane-Tendulkar.vpf via http://j.mp/tamil_news
பெட்ரோல், டிசல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது
By Unknown 1:50 PM
பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகளும், டீசல் லிட்டருக்கு 71 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவின் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 69 ரூபாய் 84 காசுகளுக்கு விற்பனை செய்யப்படும். ஒரு லிட்டர் டீசல் விலை 53 ரூபாய் 52 காசுகளுக்கு விற்பனை செய்யப்படும். இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததன் எதிரொலியாக, இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த முறை பெட்ரோல் விலை லிட்டருக்கு 64 காசுகள் அதிகரிக்கப்பட்டது. மேலும் டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 35 காசுகள் குறைக்கப்பட்டது. Link: http://www.ns7.tv/ta/node/77106 via http://j.mp/tamil_news
இன்று முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மட அணிவது கட்டாயம்
By Unknown 1:50 PM
தமிழகத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் இன்று முதல் தலைக்கவசம் அணிவது, கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டுனர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து பயணம் செய்பவரும் ஹெல்மட் அணிவது, கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஜூலை 1-ஆம் தேதி முதல் தலைக்கவசம் அணிய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசும் தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது. வாகன ஓட்டுனர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து பயணம் செய்பவரும் ஹெல்மட் அணிவது, கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து, அவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது. சென்னையில் நேற்று தலைக்கவசம் வாங்க வந்தவர்களின் கூட்டம் அலைமோதியதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் தமிழகம் முழுவதும் தலைக்கவச விற்பனை அதிகமாக காணப்பட்டது. Link: http://www.ns7.tv/ta/node/77109 via http://j.mp/tamil_news
ஜிம்பாப்வே பயணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு: கேப்டனாக ரகானே நியமனம் - ஹர்பஜனுக்கு வாய்ப்பு
By Unknown 1:58 AM
புதுடெல்லி, ஜூன் 29- ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை தேர்வு செய்யும் தேர்வுக்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் ரகானே தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரகானே(கேப்டன்), மனோஜ் திவாரி, உத்தப்பா, அம்பதி ராயுடு, ஹர்பஜன், முரளி விஜய், கேதர் ஜாதவ், மணிஷ் பாண்டே, அக்சர் படேல், கர்ண் ஷர்மா, ஸ்டூவர்ட் பின்னி, மோஹித் ஷர்மா, தவால் குல்கர்னி, புவனேஸ்வர் குமார், சந்தீப் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதில் 4 வருடங்களுக்கு பின் மீண்டும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட ஹர்பஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் 3 ஒரு நாள் போட்டிகளிலும், 2 டி.20 போட்டிகளிலும் இந்திய அணி விளையாட உள்ளது. இச்சுற்றுபயணத்தில் தோனி, கோலி, ரெய்னா, ரோகித் சர்மா, அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Link: http://www.maalaimalar.com/2015/06/29135130/Selectors-announce-Indian-squa.html via http://j.mp/tamil_news
கோடம்பாக்கத்தில் நேற்றிரவு முஸ்லீம் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற எஸ்.ஐ.க்கு அடி உதை மறியலால் பரபரப்பு!!
By Unknown 4:33 PM
சென்னை: பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற டிராபிக் போலீஸ் எஸ்.ஐயை பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். இந்த சம்பவம் கோடம்பாக்கத்தில் நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட எஸ்.ஐ மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தாசாமகான் பகுதியை சேர்ந்தவர் அசீனா. இவர் கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வழக்கம் போல் நேற்று பணிக்கு வந்த அசீனா இரவு 8.30மணி அளவில் வீடு திரும்புவதற்காக கோடம்பாக்கம் ஹைரோடு அருகே நடந்து வந்தார். கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே சாலையை கடப்பதற்காக அங்கு நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம், அசீனாவுக்கு சாலையை கடக்க உதவுவது போல் அவரது கையை பிடித்து இழுத்து தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். அதிர்ச்சி அடைந்த அசீனா பன்னீர்செல்வத்தை கண்டித்துள்ளார். அதற்கு அவர் அசீனாவை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அசீனா அருகில் இருந்த பள்ளிவாசலுக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஒன்று திரண்டு வந்து எஸ்ஐ பன்னீர்செல்வத்தை தாக்கியுள்ளனர்.
மேலும் பன்னீர்செல்வத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் மறுமலர்ச்சி தமுமுக நிர்வாகிகள் தலைமையில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டிருந்தவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ‘பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட எஸ்.ஐ. பன்னீர்செல்வத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியளித்ததை தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட எஸ்.ஐ மீது கோடம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் கோடம்பாக்கம் பகுதியில் நேற்றிரவு
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு டோனி, கோலிக்கு ஓய்வு அளிக்க முடிவு?
By Unknown 4:30 PM
புதுடெல்லி, ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. இதில் டோனி, கோலி, அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஜிம்பாப்வே பயணம் இந்திய கிரிக்கெட் அணி குறுகிய கால சுற்றுப்பயணமாக அடுத்த மாதம் (ஜூலை) 7-ந்தேதி ஜிம்பாப்வேக்கு புறப்படுகிறது. அங்கு மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் (ஜூலை 10, 12, 14) இரண்டு 20 ஓவர் போட்டிகளிலும் (ஜூலை 17, 19) பங்கேற்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்படுகிறது. தேர்வு குழு தலைவர் சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி அணியை தேர்வு செய்ய இருக்கிறார்கள். முன்னணி வீரர்களுக்கு ஓய்வு தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடுவதாலும், ஜிம்பாப்வே சிறிய அணி என்பதாலும் இந்த தொடருக்கு முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளித்து விட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும், விராட் கோலியும் இரண்டு வடிவிலான கிரிக்கெட்டிலும் (டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி) விளையாடுகிறார்கள். கேப்டன் டோனிக்கும் பணிச்சுமை அதிகம். ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு உலக கோப்பை மற்றும் மற்றும் கடினமான ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவர்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இவ்வாறு ஓய்வு கொடுக்கும் போது டெஸ்ட் கேப்டன் விராட் கோலியும், அஸ்வினும் அடுத்து வரும் கடினமான இலங்கை டெஸ்ட் தொடருக்கு புத்துணர்ச்சியுடன் தயாராக முடியும்’ என்றார். கேப்டன் பதவி யாருக்கு? டோனி, கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் பட்சத்தில் கேப்டன் பதவி ரோகித் சர்மா அல்லது சுரேஷ் ரெய்னா ஆகியோரில் ஒருவருக்கு கிடைக்கும். இதில் ரோகித் சர்மாவுக்கு, ஐ.பி.எல். சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்திய அனுபவம் இருப்பதால் அவருக்கு கூடுதல் வாய்ப்பு இருக்கிறது. ரஹானே மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ராபின் உத்தப்பா ஆகியோருக்கு இடம் கிடைக்கும் என்று தெரிகிறது. ஸ்டூவர்ட் பின்னி, அம்பத்தி ராயுடு, மொகித் ஷர்மா உள்ளிட்டோர் அணியில் தொடருவார்கள். சுழற்பந்து வீச்சாளர் இடத்திற்கு பர்வேஸ் ரசூல், ஹர்பஜன்சிங் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது. முன்னதாக ஒளிபரப்பு நிறுவனமான டென் ஸ்போர்ட்சுக்கும், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே நீடித்த பிரச்சினை காரணமாக, இந்தியா-ஜிம்பாப்வே தொடர் நடக்குமா? என்ற சந்தேகம் நிலவியது. இதற்கிடையே, சில தினங்களுக்கு முன்பு பார்படோசில் நடந்த ஐ.சி.சி. வருடாந்திர கூட்டத்தின் போது இந்தியா மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி அதில் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டதால், இந்த தொடர் திட்டமிட்டபடி நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. Link: www.DailyThanthi.com/Sports/Cricket/2015/06/29013727/Dhoni-Kohli-decided-to-retire.vpf via http://j.mp/tamil_news
முறைகேடு நடைபெறுவதாக டிராபிக் ராமசாமி புகார்
By Unknown 4:27 PM
ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதாக சுயேட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி புகார் தெரிவித்துள்ளார். இன்று காலை தண்டையார்பேட்டை சேனி அம்மன் கோவில் தெரு அருகில் உள்ள வாக்குச்சாவடிக்கு டிராபிக் ராமசாமி வந்தார். அப்போது, வாக்குச்சாவடி அருகே அதிக அளவில் அதிமுகவினர் இருப்பதாகவும், தேர்தல் விதிமுறைகளை மிறுவதாகவும் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். இந்நிலையில், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அதிமுகவினர், தேர்தல் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என தெரிவித்தனர். Link: http://www.ns7.tv/ta/node/74643 via http://j.mp/tamil_news
ஜூலை 1ம் தேதி முதல் எழும்பூர் நீதிமன்றம் இடம் மாறுகிறது
By Unknown 4:24 PM
ஜூலை 1ம் தேதி முதல் எழும்பூர் நீதிமன்றம் மூர் மார்க்கெட் வணிக வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. அல்லிகுளம் வாளாகத்திற்கு மாற்றம் மிகவும் பழைய கட்டடமான சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற கட்டடத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த வளாகத்தில் இயங்கி வரும் நீதிமன்றங்கள் சென்னை மூர் மார்க்கெட் அல்லிகுளம் வாளாகத்திற்கு ஜூலை 1ம் தேதி முதல் படிப்படியாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு இருக்காது அல்லிகுளம் வளாகத்தில் முதல் இரண்டு தளங்கள் ஏற்கனவே வணிக வளாகமாக இயங்கி வருகின்றன. இந்த வளாகத்தில் புதியதாக நீதிமன்றம் வருவதால் தங்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்கின்றனர் கடை உரிமையாளர்கள். சீரமைக்கும் பணிகள் 59 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவில் சென்னையில் உள்ள கீழ் நீதிமன்றங்களை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி, பழமை வாய்ந்த கட்டிடமான எழும்பூர் நீதிமன்றம் 4 கோடியே 39 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது. 10 அல்லது 14 மாதங்களுக்குள் இந்த சீரமைப்பு பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு பிரச்சனைகள் இதனிடையே, அல்லிகுளம் வளாகத்திற்கு தற்காலிகமாக மாற்றப்படும் நிலையில் பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறுகிறார் அகில இந்திய வழக்கறிஞர் நலச் சங்கத்தை சேர்ந்த மணிவண்ணன். Link: http://www.ns7.tv/ta/node/75138 via http://j.mp/tamil_news
ஆம்பூரில் வன்முறை:50 பேர்கைது
By Unknown 6:10 PM
வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் விசாரணை ஒன்றிற்காக ஷமில் அகமது என்பவர் அழைத்து செல்லப்பட்டார். விசாரணையின் போது அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் வன்முறையாக மாறியது. உயிரிழப்பிற்கு காரணமான இன்ஸ்பெக்டரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது வன்முறையாளர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதில் போலீஸ் எஸ்.பி செந்தில் குமாரி மற்றும் போலீசார் காயமடைந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைக்கப்பட்டது. இதனையடுத்து வன்முறையில் ஈடுபட்டதாக சுமார் 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். Link: http://www.dinamalar.com/news_detail.asp?id=1284727 via http://j.mp/tamil_news
நாசா தகவல் ஜூன் 30ம் நாள் 1 வினாடி அதிகம்
By Unknown 6:04 PM
வாஷிங்டன்: ஜூன் 30ம் நாள், வழக்கத்தை விட 1 வினாடி அதிகமாக இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது. பூமி, சூரியன், பால்வெளி அண்டம் உள்ளிட்டவற்றை, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராயச்சி மையம், ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இங்குள்ள விஞ்ஞானிகள், பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு சுவாரசியமான தகவல்களை தெரிவிப்பார்கள். அந்த வகையில், நாளை மறுதினம் வழக்கத்தை விட 1 வினாடி அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார்கள். அதன் விவரம்: பூமி தன்னைத் தானே ஒருமுறை சுற்றிக் கொள்வதை ஒரு நாள் என்று அழைக்கிறோம். இது வழக்கமாக மொத்தம் 86,400 வினாடிகளை கொண்டது. பூமியின் சுழல் வேகம் குறைவதால், நாளை மறுநாளின் கால அளவு, 1 வினாடி அதிகமாக இருக்கும். வழக்கமாக, சர்வதேச ஒருங்கிணைப்பு நேரத்தில் (யுடிசி) 23:59:59 மணிக்கு பின்னர் 00:00:00 என மறுநாள் தொடங்கி விடும். ஆனால், ஜூன் 30ம் தேதியை பொருத்தவரை, நேரம் 23:59:59 லிருந்து 23:59:60 க்கு மாறும். அதன்பின்னரே 00:00:00 என மறுநாள் தொடங்கும். இவ்வாறு நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=152999 via http://j.mp/tamil_news
ஜூலை 5-ந்தேதி முதல் அமல்: ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிரடி மாற்றங்கள் ‘‘இனி பேட்டிங் பவர்-பிளே கிடையாது’’
By Unknown 6:00 PM
புதுடெல்லி, பந்து வீச்சாளர்களுக்கு அனுகூலமாக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஐ.சி.சி. பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. இதன்படி இனி பேட்டிங் பவர்-பிளே கிடையாது. ரன்மழை போட்டி சர்வதேச கிரிக்கெட்டில், ஒரு நாள் போட்டிக்கு உள்ள வரவேற்பே தனி. ஆனால் முன்பு போல் இல்லாமல் ஒருநாள் போட்டிகள், பேட்ஸ்மேன்களின் சொர்க்கமாக மாறி விட்டது. ஒரு காலத்தில் அபூர்வமாக இருந்த தனிநபர் இரட்டை சதத்தை, அடிக்கடி பார்க்க முடிகிறது. அது மட்டுமின்றி அணிகளும் 400 ரன்களை சர்வசாதாரணமாக குவிக்கின்றன. சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்திய உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 28 முறை 300 ரன்களுக்கு மேல் திரட்டப்பட்டன. இதில் மூன்று முறை 400 ரன்களை கடந்ததும் அடங்கும். தவிர, வெஸ்ட் இண்டீசின் கிறிஸ்கெய்ல், நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் இரட்டை செஞ்சுரி விளாசி சாதனை படைத்தனர். டோனியின் கோரிக்கை ஒரு நாள் போட்டி விதிகள் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், பேட்ஸ்மேன்களுக்கு இணையாக பவுலர்களும் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் பல்வேறு வீரர்கள் வலியுறுத்தினர். இந்திய கேப்டன் டோனியும் அண்மையில் மாற்றம் தேவை என்று குரல் எழுப்பினார். குறிப்பாக ‘பவர்-பிளே’ இல்லாத நேரத்தில் 30 யார்டுக்கு வெளியே நிறுத்தப்படும் பீல்டர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதன் மூலம் இறுதிகட்டத்தில் எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியாமல் போய் விடுவதாக புகார் கூறினார். இதையடுத்து இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே தலைமையிலான ஐ.சி.சி.யின் கிரிக்கெட் கமிட்டி, ஒரு நாள் போட்டியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விரிவாக விவாதித்து, பவுலர்களும் பலன் அடையும் வகையில் சில பரிந்துரைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) அனுப்பியது. இந்த நிலையில் ஐ.சி.சி.யின் வருடாந்திர கூட்டம் வெஸ்ட் இண்டீசின் பார்படோசில் 5 நாட்கள் நடந்தது. இதில் கும்பிளே தலைமையிலான கிரிக்கெட் கமிட்டியின் சிபாரிசுகளை ஏற்றுக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. பேட்டிங் பவர்-பிளே கிடையாது இதன்படி ஒரு நாள் போட்டிகளில் சில அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:- * ஒரு நாள் போட்டியில் சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும் அதிகரிக்க கொண்டு வரப்பட்டது தான் ‘பவர்-பிளே’. ‘பவர்-பிளே’யின் போது பெரும்பாலான பீல்டர்கள் உள்வட்டத்திற்குள் நிறுத்தப்படுவதால் பேட்ஸ்மேன்களால் சிக்சர், பவுண்டரிகள் சுலபமாக நொறுக்க முடியும். இதனால் பந்து வீச்சாளர்களுக்கே சுமை அதிகம். இதனை கருத்தில் கொண்டு ‘பவர்-பிளே’யின் எண்ணிக்கை 15 ஓவர்களில் இருந்து 10 ஓவர்களாக குறைக்கப்படுகிறது. அதாவது முதல் 10 ஓவர் கட்டாய பவர்-பிளே வழக்கம் போல் உண்டு. அதன் பிறகு 15-வது ஓவரில் இருந்து 40-வது ஓவருக்குள் 5 ஓவர் ‘பேட்டிங்-பவர்பிளே’ கொண்டு வரப்படும். பொதுவாக 36-வது முதல் 40-வது ஓவருக்குள் தான் பேட்ஸ்மேன்கள் தங்களுக்கு விருப்பமான இந்த பவர்-பிளேயை தேர்வு செய்வார்கள். இனி பேட்டிங் பவர்-பிளே’கிடையாது. * கட்டாய ‘பவர்-பிளே’ அமலில் இருக்கும் முதல் 10 ஓவர்களின் போது, களத்தில் நிற்கும் பேட்ஸ்மேனில் இருந்து 14 மீட்டர் தூரத்திற்குள் (கேட்ச் செய்யும் பகுதி) 2 பீல்டர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பது முந்தைய விதியாகும். ஸ்லிப், லெக்-ஸ்லிப், கல்லி போன்ற திசைகளில் இந்த 2 பீல்டர்களும் நிறுத்தப்படுவது உண்டு. இனி பேட்ஸ்மேன்களுக்கு அருகில் ‘கேட்ச்’ பகுதியில் இரண்டு பீல்டர்களை நிறுத்த வேண்டிய தேவையில்லை. ‘பிரீட்’ விரிவாக்கம் * ஒரு நாள் போட்டியில் பவுலர் பந்து வீசும் போது கிரீஸ் கோட்டை தாண்டி வீசினால் நோ-பால் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கு ‘பிரீட்’ வழங்கப்படும். அதாவது அதற்கு அடுத்த பந்தை பவுலர் வீசும் போது, அந்த பந்தில் பேட்ஸ்மேன்களுக்கு எந்த அவுட்டும் (ரன்-அவுட் தவிர) வழங்கப்படமாட்டாது. இனி எல்லா வகையான ‘நோ-பால்’களுக்கும் ‘பிரீட்’ வழங்கப்படும். இது 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கும் பொருந்தும். * 41 முதல் 50 ஓவர்கள் வரை, 30 யார்டு தூரத்திற்கு (90 அடி) வெளியே முன்பு அதிகபட்சமாக 4 பீல்டர்களுக்கு மேல் நிறுத்தக்கூடாது என்று விதிமுறை இருந்தது. இதிலும் மாற்றம் செய்யப்படுகிறது. இனி இந்த சமயத்தில் அதிகபட்சமாக 5 பீல்டர்களை நிறுத்திக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது கடைசி கட்ட ரன் வேட்டையை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். திருத்தப்பட்ட புதிய விதிமுறைகள் அடுத்த மாதம் (ஜூலை) 5-ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 10-ந்தேதி தொடங்கும் வங்காளதேசம்-தென்ஆப்பிரிக்கா இடையிலான ஒரு நாள் தொடரில் இருந்து புதிய விதிகளை பார்க்கலாம். அதே தேதியில் இந்திய அணியின் ஜிம்பாப்வே தொடர் திட்டமிட்டப்படி தொடங்க இருப்பதால் அந்த தொடரும் புதிய விதிக்குட்பட்டே நடக்கும். மாற்றம் ஏன்? பின்னர் ஐ.சி.சி.யின் தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் அளித்த பேட்டியில், ‘வெற்றிகரமாக நிறைவடைந்த 2015-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு பிறகு ஒரு நாள் போட்டி விதிமுறைகளை நாங்கள் விரிவாக ஆராய்ந்தோம். மிகவும் புகழ்பெற்ற இந்த வடிவிலான போட்டிக்கு பெரிய அளவில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டமுறை எளிமையானதாகவும், மக்களால் எளிதாக புரிந்து கொள்ளத்தக்க வகையிலும் இருக்க வேண்டும்; பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர் இரண்டு தரப்பினருக்குமே சரிசம வாய்ப்பு அமைய வேண்டும் என்று விரும்பினோம். அதன் அடிப்படையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றத்தின் மூலம் ஒரு நாள் போட்டியில் ஆக்ரோஷம், அதிரடி, ‘திரிலிங்’ ஆகியவை மீண்டும் தொடரும் என்பதை உறுதிப்படுத்த முயற்சித்துள்ளோம்.’ என்றார். அமெரிக்கா நீக்கம் ஐ.சி.சி. அமைப்பில் இருந்து உறுப்பு நாடான அமெரிக்க கிரிக்கெட் சங்கம் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தின் செயல்பாடு கவலை அளிக்கும் வகையில் இருப்பதாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்க கிரிக்கெட் சங்கம் இடை நீக்கம் செய்யப்படுவது இது 3-வது முறையாகும். Link: www.DailyThanthi.com/Sports/Cricket/2015/06/28022431/There-is-no-batting-powerplay.vpf via http://j.mp/tamil_news
abivai