தூத்துக்குடி செல்சினிகாலனி முட்புதர் பகுதியில் இன்று காலை ஒரு இளம்பெண் பிணம் எரிந்து கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தூத்துக்குடி தென்பாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஏ.எஸ்.பி. அருண்சக்திகுமார், இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், ஜேசுபாதம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்த கிடந்த பெண்ணின் உடல் முற்றிலும் எரிந்து கிடந்தது. அந்த பெண்ணிற்கு சுமார் 35 வயது இருக்கும்.
அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணை மர்மநபர்கள் காட்டுப்பகுதிக்கு கடத்தி வந்து கற்பழித்து எரித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் வேறு ஏதேனும் காரணமா என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. எஸ்.பி.அஸ்வின்கோட்னீசும் சென்று விசாரணை நடத்தினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுப்பகுதியில் சமீபகாலமாக பெண்கள் எரித்துக்கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதுவரை கொலை சம்பந்தமாக யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. இந்நிலையில் இன்று இளம்பெண் ஒருவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













0 thoughts on “தூத்துக்குடியில் பெண் எரித்துக்கொலை: போலீசார் விசாரணை”