சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம் (MBBS) மற்றும் பல்மருத்துவம் (BDS) படிப்பிற்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) சனிக்கிழமை வெளியிடப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் 2015-16ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் மற்றும் கையேடு விற்பனை கடந்த மே 10-ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. விண்ணப்ப விற்பனை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 22-ம் தேதி வரை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம், அனைத்து படிப்பு மையங்களிலும் விற்பனை செய்யப்பட்டன. பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் 150 பேரும், பிடிஎஸ் படிப்பில் 80 பேரும் மாணவ, மாணவியர்கள் தனி கலந்தாய்வு மூலம் அனுமதி சேர்க்கை செய்யப்படவுள்ளனர். எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கு 5940 விண்ணப்பங்களும், பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கு 1438 விண்ணப்பங்களும் வரப்பெற்றன. பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களுக்கும் ஒப்புகை சீட்டு தாபல் மூலம் அனுப்பப்பட்டது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்பு எண்களை (ரேண்டம் எண்) சனிக்கிழமை பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தில் துணைவேந்தர் செ.மணியன் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பதிவாளர் ஜெ.வசந்தகுமார், சிண்டிகேட் உறுப்பினர்கள் பூங்குன்றம், பாலசுந்தரம், மருத்துவப்புல முதல்வர் டாக்டர் பி.வி.எஸ்.பிரசாத், சேர்க்கை பிரிவு ஆலோசகர் தி.ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் துணைவேந்தர் செ.மணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: இந்த ஆண்டு எம்பிபிஎஸ் 150 இடங்களும், பிடிஎஸ் 80 இடங்களிலும் மாணவர்கள் சேர்க்கை செய்யப்படுவார்கள். மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கைக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகஅரசு இடஒதுக்கீடு விதிப்பட்டியும், மாணவர்கள் மேல்நிலைப்பள்ளி அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடங்கள் தமிழகஅரசின் விதிப்படி ஒதுக்கப்படும். அனுமதி சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அவர்கள் பிளஸ்டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள். எம்பிபிஎஸ் படிப்பிற்கு ஜூலை 1-ம் தேதி காலை தொடங்கி 2-ம் தேதி பிற்பகல் வரையும், பிடிஎஸ் படிப்பிற்கு ஜூலை 2-ம் தேதி பிற்பகல் தொடங்கி 3-ம் தேதி மாலை வரை நடைபெறுகிறது. தகுதியுள்ள மாணவர்களுக்கு அழைப்பு கடிதம் விரைவு தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும். குறுந்தகவல் (SMS) மூலம் அனுப்பப்படும், மேலும் பல்கலைக்கழகக இணையதளத்தில் www.annamalaiuniversity.ac.in மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் auadmission2015@gmail.com என்ற முகவரியிலும், மைய தொலைபேசி எண்கள் 04144-238348, 238349 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்தார். Link: http://www.dinamani.com/latest_news/2015/06/27/அண்ணாமலைப்-பல்கலை.-எம்பிபிஎ/article2889537.ece via http://j.mp/tamil_news
Home
அண்ணாமலைப் பல்கலை. எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்புக்கான சமவாய்ப்பு எண் நம்பர் வெளியீடு: ஜூலை 1-ல் கவுன்சிலிங் தொடக்கம்
அண்ணாமலைப் பல்கலை. எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்புக்கான சமவாய்ப்பு எண் நம்பர் வெளியீடு: ஜூலை 1-ல் கவுன்சிலிங் தொடக்கம்
By Unknown 8:23 AM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “அண்ணாமலைப் பல்கலை. எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்புக்கான சமவாய்ப்பு எண் நம்பர் வெளியீடு: ஜூலை 1-ல் கவுன்சிலிங் தொடக்கம் ”