புதுடெல்லி, புதுடெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்தில் மர்மநபர்கள் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து விமானம், விமான நிலையத்திற்கே திரும்பியது. புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தில் நேற்று இரவு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் அமெரிக்கா புறப்பட்டு சென்றது. விமானம் ஓடுபாதையில் சென்றபோது, விமானத்தில் இருந்த இருவர் தொடர்பாக அடையாளம் காணப்படவில்லை. விமானம் ஓடுபாதையில் ஓட தொடங்கிவிட்டது. பின்னர் விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு திருப்பப்பட்டு உள்ளது. இரண்டு பயணிகளும் தங்களுடைய ஆவணங்களை தெளிவுசெய்யாதது காரணமாக இச்சம்பவம் நடந்துஉள்ளது. இரண்டு நபர்களையும் இந்தியாவிற்குள் அனுமதிக்க இந்திய குடியுரிமை அதிகாரிகள் மறுத்துவிட்டனர், இதனையடுத்து அவர்கள் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவித்துஉள்ளன. Link: www.DailyThanthi.com/News/India/2015/06/17105556/US-bound-United-Airlines-flight-makes-a-U-turn-to.vpf via http://j.mp/tamil_news
Home
விமானத்தில் மர்மநபர்கள், அமெரிக்கா புறப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் யூ-டர்ன்
விமானத்தில் மர்மநபர்கள், அமெரிக்கா புறப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் யூ-டர்ன்
By Unknown 12:29 AM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “விமானத்தில் மர்மநபர்கள், அமெரிக்கா புறப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் யூ-டர்ன் ”