திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட அமராவதி வனச்சரகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப்பகுதிகளில் புகுந்து தென்னை, வாழை போன்ற பயிர்களை அழித்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். யானைகள் வனத்தை விட்டு வெளியில் வருவது கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், உடுமலை ராவணாபுரம் பகுதியில் சிவசுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக புகுந்து 50 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அழித்து விட்டு சென்றுள்ளது. இதனால் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் சேதமடைந்துள்ளதாக கூறுகிறார். இரவு நேரத்தில் வனத்தில் இருந்து யானைகள் கிராமப்பகுதிக்குள் வராமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினர் உடனடியாக எடுத்து பயிர்களை காப்பற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். இது குறித்து வனச்சரகர் தங்கராஜ், பன்னீர் செல்வத்திடம் கேட்டபோது, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தேவையான நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் யானைகள் வராமல் தடுக்க வனக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். Link: http://www.ns7.tv/ta/node/67814 via http://j.mp/tamil_news
Home
உடுமலை பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் விளைநிலங்கள் பாதிப்பு
உடுமலை பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் விளைநிலங்கள் பாதிப்பு
By Unknown 6:52 AM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “உடுமலை பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் விளைநிலங்கள் பாதிப்பு”