மியன்மாரில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் கொடூர தாக்குதலைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின்னர் ஒலுவில் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக பெரும் திரளான பொது மக்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒலுவில் அல்- நஹ்லா சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கண்டனப் பேரணியில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.
ஆர்பாட்டக்காரர்கள், “மியன்மார் முஸ்லிம்களை கொல்லாதே, உலக முஸ்லிம் தலைவர்களே மியன்மார் முஸ்லிம்களை பாதுகாருங்கள், மியன்மார் பற்றி ஐ.நா ஏன் மௌனம்” போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பல்வேறு தமிழ், சிங்கள, ஆங்கில பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
மியன்மார் நாட்டில் முஸ்லிம்களுக்கு இளைக்கப்படும் கொடுமைகளை இலங்கை அரசாங்கம் கண்டிக்க வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை பேரணியில் ஈடுபட்டேர் தாங்கி இருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளான இளைஞர்கள், சிறுவர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.













0 thoughts on “'மியன்மார் முஸ்லிம்களை கொல்லாதே' : ஒலுவில் பகுதியில் ஆர்ப்பாட்டம் ”