ஆந்திரத்துக்கு புதிய தலைநகரை உருவாக்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை (ஜூன் 6) நடைபெறவுள்ளது. இதில், மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டவுள்ளார்.
இதுகுறித்து ஆந்திர மாநில வேளாண் துறை அமைச்சர் பிரதிபதி புல்லா ராவ், குண்டூரில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: கிருஷ்ணா நதி அருகே அமைந்துள்ள மண்டம் கிராமத்தில் காலை 8.49 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில், முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு, பூமி பூஜையை மேற்கொள்வார். கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்களில் சட்டப்பேரவை மேலவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. ஆகையால், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றார் அவர்.
ஆந்திரப் பிரிவினைப் பிறகு, அந்த மாநிலத்துக்கு புதிய தலைநகர் உருவாக்கப்படும் வரை, ஆந்திரத்துக்கும், தெலங்கானாவுக்கும் ஹைதராபாத் நகரம் பொதுவான தலைநகராக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரத்தின் புதிய தலைநகரை விஜயவாடா - குண்டூர்
உள்பட்ட இடத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Home
ஆந்திர புதிய தலைநகர்: இன்று அடிக்கல் நாட்டு விழா
ஆந்திர புதிய தலைநகர்: இன்று அடிக்கல் நாட்டு விழா
By Unknown 12:30 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “ஆந்திர புதிய தலைநகர்: இன்று அடிக்கல் நாட்டு விழா ”