கொழும்பு, பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணி 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை 304 ரன் இலங்கை - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 138 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி தொடக்க நாளில் ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் குவித்து 166 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக கவ்ஷல் சில்வா 80 ரன்களும் (ரன்-அவுட்), கேப்டன் மேத்யூஸ் 77 ரன்களும், சங்கக்கரா 34 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா 5 விக்கெட்டுகளை அள்ளினார். யாசிர் ஷா சாதனை இரண்டாம் நாள் ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சில சாதனைகள் வருமாறு:- *9-வது டெஸ்டில் ஆடும் 29 வயதான சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா இதுவரை 51 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் அதிவேகமாக 50 விக்கெட்களை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர் என்ற சிறப்பை பெற்றார். வக்கார் யூனிஸ், சபிர் அகமது மற்றும் முகமது ஆசிப் ஆகியோர் தங்களது 10-வது டெஸ்டில் 50 விக்கெட்டுகளை கடந்ததே இதற்கு முன்பு பாகிஸ்தான் பவுலர்களின் சாதனையாக இருந்தது. *இந்த ஆண்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலிலும் யாசிர் ஷா (4 டெஸ்டில் 24 விக்கெட்) முதலிடம் வகிக்கிறார். *இலங்கை வீரர் கவ்ஷல் சில்வா ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு தேவையில்லாமல் ரன்-அவுட் ஆனார். அப்போது எதிர்முனையில் நின்றவர், கேப்டன் மேத்யூஸ். 2008-ம் ஆண்டு கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆன மேத்யூஸ் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 54 முறை இவ்வாறு ரன்-அவுட் நிகழ்வுகளில் பங்கெடுத்துள்ளார். மேற்கண்ட காலக்கட்டத்தில் ரன்-அவுட் சோகத்தில் இவருக்கே (அடுத்து இந்திய கேப்டன் டோனி 37 முறை) முதலிடம் உண்டு. இதில் மேத்யூஸ் ரன்-அவுட் ஆனது 14 முறை. அவரது பார்ட்னரின் ரன்-அவுட் 40 தடவை ஆகும். வஹாப் ரியாஸ் விலகல் இந்த டெஸ்டில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. இதற்கிடையே முதல் நாளில் பேட்டிங்கின் போது, பந்து தாக்கியதில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாசின் இடது கை விரலில் நூலிழை அளவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. தடுமாற்றத்துடனே 2-வது நாளில் அவர் 9 ஓவர்கள் பந்து வீசினார். காயம் குணமடைய குறைந்தது 2 வார காலம் ஆகும் என்பதால் எஞ்சிய டெஸ்ட் தொடரில் அவர் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Link: www.DailyThanthi.com/Sports/Cricket/2015/06/27020206/2nd-Test-against-Pakistan.vpf via http://j.mp/tamil_news
Home
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இலங்கை அணி முன்னிலை
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இலங்கை அணி முன்னிலை
By Unknown 4:25 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இலங்கை அணி முன்னிலை ”