தமிழக பள்ளிகளில் கல்வி நேரம் வருகிற 24ம் திகதி முதல் மாற்றி அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் காலை ஒன்பதரை மணிக்கு ஆரம்பமாகும். ஆனால், இப்போது இந்த நேரத்தை காலை 9 மணிக்கு மாற்றி அமைக்க பள்ளிக் கல்வித்துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதோடு 45 நிமிடமாக இருந்த ஒரு பாட வகுப்பை 40 நிமிடமாக மாற்றி அமைக்கவும் பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. இந்த நடைமுறை ஆரம்பக் கல்வி, நடுநிலைக் கல்வி, உயர் நிலைக் கல்வி, மேல் நிலைக் கல்வி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மாலை பள்ளி முடியும் நேரம் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பதால் அதில் ஏதும் மாற்றம் இருக்காது என்றேத் தெரிய வருகிறது.













0 thoughts on “தமிழக பள்ளிகளில் கல்வி நேரம் மாற்றம்!”