BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

அலங்காநல்லூரில் பாலப்பணியின்போது குழாய்கள் பணால் : 100 கிராமங்கள் குடிநீரின்றி தவிப்பு அலங்காநல்லூர்:

நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்படும் சாலை சீரமைப்பு, புதிய பாலம் அமைக்கும் பணியின் போது காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் உடைந்து வருகின்றன. இதனால் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றன. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி பகுதிகளில் அடங்கிய 100க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் முலம் குடிநீர் வழங்கும் பணிகள் தற்போது 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. தற்போது சோதனை ஓட்ட முறையில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.தற்போது அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை முலம் சாலை விரிவாக்கம், புதிய பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பாலம் அமைக்கும் பணியின் போது ஜேசிபி மூலம் பல இடங்களில் பள்ளம் தோண்டும் போது, ஒப்பந்ததாரர்களின் கவனக் குறைவால் பல இடங்களில் கூட்டுக்குடிநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் பெருமளவு வீணாகி வருகிறது. இதனால் 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வந்து சேரவில்லை. அடுத்த மாதம் கூட்டுக் குழாய் திட்டப் பணிகள் நிறைவடைந்து குடிநீர் முறையாக வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் குடிநீர் வழங்கும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக பொது மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.தற்போதைய நிலவரப்படி அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பதிக்கப்பட்ட ராட்சஷ குழாய்கள் சேதமடைந்துள்ளன. இவற்றை மராமத்து செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. வாடிப்பட்டி நகர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு செல்லும் பிரதான காவிரி கூட்டுக்குடிநீர் குழாய், சாத்தியாறு அணைப்பகுதியில் புதிய பாலம் அமைக்கும் பணிக்காக ஜேசிபி இயந்திரம் முலம் தோண்டும் போது உடைந்தது. இதனால் இப்பகுதிகளில் கடந்த 2,3 நாட்களாக குடி நீர் வரவில்லை என்று பொது மக்கள் குற்றம் சாட்டினர். Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=150941 via http://j.mp/tamil_news


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “அலங்காநல்லூரில் பாலப்பணியின்போது குழாய்கள் பணால் : 100 கிராமங்கள் குடிநீரின்றி தவிப்பு அலங்காநல்லூர்: