மதுரை, ஜூன். 7–மதுரை சிங்கராயர் காலனி பூங்கா தெருவை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது58), வக்கீல். இவரது உறவினர்கள் வெளிநாடு சென்றனர். அவர்களை வழி அனுப்புவதற்காக கடந்த 4–ந்தேதி குடும்பத்தினருடன் சங்கரலிங்கம் சென்னை சென்றார். அங்கு அவர்களை வழி அனுப்பிவிட்டு நேற்று இரவு சங்கரலிங்கமும், அவரது குடும்பத்தினரும் வீடு திரும்பினர்.அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.போலீசார் வந்ததும் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோவும் திறந்தே கிடந்தது. அதிலிருந்த பொருட்கள் வீடு முழுவதும் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை போயிருப்பதாக வக்கீல் சங்கரலிங்கம் போலீசாரிடம் தெரிவித்தார்.இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.
Home
மதுரையில் வக்கீல் வீட்டில் 20 பவுன்– ரூ.1 லட்சம் கொள்ளை
மதுரையில் வக்கீல் வீட்டில் 20 பவுன்– ரூ.1 லட்சம் கொள்ளை
By Unknown 1:07 AM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “மதுரையில் வக்கீல் வீட்டில் 20 பவுன்– ரூ.1 லட்சம் கொள்ளை”