சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தின் ஹொஷாங்கபாட் இல் இந்திய ரூபாய் நோட்டுக்களுக்கான விசேட தாள்களை அச்சிடும் தொழிற் கூடம் ஒன்றை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி திறந்து வைத்தார். இவ்வைபவத்துக்கு முதன் நாள் தால் அருண் ஜெட்லி இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் பாவனைக்கு வருவது அவசியம் என வலியுறுத்தியிருந்தார்.
இதன்போது அவர் முன்னேற்றத்தை நோக்கி நடை போட்டுக் கொண்டிருக்கும் உலக நாடுகள் பிளாஸ்டிக் பண நோட்டுக்களுக்கும் இன்னும் புதிய கட்டண வழிகளுக்கும் விரைவாக மாறிக் கொண்டிருப்பதாகவும் தற்போது இதற்கான தேவை இந்தியாவிலும் எழுந்திருப்பதாகவும் இந்த பாதையில் செல்வதற்கான முதலாவது படிக்கட்டுக்களை நாம் முன்வைக்கும் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களை பிரசித்தி அடையச் செய்வதற்காகவே இந்திய அரசு 2012 இல் RuPay என்ற கடன் அட்டை முறையை இந்திய தேசிய கட்டண வலிமுறை அமைப்பு (NPCI) மூலம் அறிமுகப் படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது பரவலாகப் பாவனையில் இருக்கும் RuPay இலத்திரனியல் கடன் அட்டை இந்தியாவில் அனைத்துவித வங்கிக் கட்டணங்களிலும், நிதி நிறுவனங்களிலும் Master card, Visa மற்றும் American Express இற்கு இணையாகப் பாவிக்கப் பட்டு வருகின்றது.
இதேவேளை இந்தியாவில் தயாரிக்கப் படும் ரூபாய் நோட்டுக்கள் சுரண்டப் படுவதில் இருந்து காப்பதும் அவசியம் எனவும் ஜெட்லி வலியுறுத்தியுள்ளார்.













0 thoughts on “பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களை வலியுறுத்தும் அருண் ஜெட்லி!”