அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் திருக்குர்ஆன் ஓத ஏற்பாடு செய்ய வேண்டும்: மோடியிடம் அப்துல் கலாம் அண்ணன் வேண்டுகோள்
By Unknown 10:54 PM india , tamilnadu
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று ராமேசுவரம் வந்தார். இறுதிச் சடங்கின் போது அப்துல் கலாம் உடலுக்கு பிரதமர் மோடி இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கு அமர்ந்திருந்த அப்துல் கலாமின் அண்ணன் முகமது முத்து மீரா லெப்பை மரைக்காயரை சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினார். அவரது கால்களை தொட்டு வணங்கி வணக்கம் செலுத்திய மோடி; சிறிது நேரம் அப்துல் கலாம் அண்ணனிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது முகமது முத்து மீரா மரைக்காயர், ‘எனது சகோதரர் அப்துல் கலாம் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தினந்தோறும் சில நிமிடங்கள் திருக்குர்ஆன் ஓத ஏற்பாடு செய்யவேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு மோடி, ‘ஆவன செய்யப்படும்’ என்று உறுதி அளித்தார். அப்துல் கலாமின் அண்ணனின் வேண்டுகோளை, சாஸ்தா பல்கலைக்கழக துணைவேந்தர் சேதுராமன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொன்னார். பின்னர் பிரதமர் அளித்த உறுதி மொழியை முகமது மீரா மரைக்காயரிடம் தெரிவித்தார். Link: http://www.maalaimalar.com/2015/07/31105142/Quran-recitation-on-place-of-b.html via http://j.mp/tamil_news
செடிகளுக்கு நீர்ப்பாசனம் செய்யும் தானியங்கி ரோபோ:
தானியங்கி தண்ணீர் பாசனம் செய்யும் ரோபோ பசுமைக் குடில் நோக்கி தானே தண்ணீரை ஊற்றுகிறது.
டேவிட் டேர்ஹார்ட் தானியங்கி ரோபோவை கண்டுபிடித்துள்ளார். டேவிட் கண்டுபிடித்த இந்த ரோபோ பயிரிடப்பட்ட செடிகளுக்கு துல்லியமாக 90,000 சதுர அடி தண்ணீரை கொடுக்கிறது. 30 கேலான் தண்ணீர் தொட்டி கொண்ட ரோபோ தன்னிச்சையாக கிரின்ஹவுஸ் – ஐ சுற்றி வந்து 24X7 என்ற அளவு தண்னீர் வழங்குவதை நாம் கற்பனை செய்து பார்க்கிறோம். ஆனால் அப்படிப்பட்ட ரோபோவை டேவிட் உருவாக்கியுள்ளார்.
தன்னிச்சையாக இயங்கும் ரோபோ எளிதான மூன்று அமைப்பு முறைகளை கொண்டு வேலையை செய்து வருகிறது. மேலும் இந்த செடிகளுக்கு தண்ணீர் தேவை எனில் சென்சார்கள் அளிக்கும் தகவல்களின் படி இந்த தானியங்கி ரோபோ செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வருகிறது.
டேவிட் விவசாய மற்றும் உயிரியல் தொழில்நுட்ப துறையில் 14 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் கண்டுபிடித்த இயந்திர ரோபோ எதிர்காலத்தில் பரோஸ்பேரோ ரோபோ விவசாயியாகவே மாறி மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று கூறுகிறார்.
அப்துல் கலாம் உடல் இன்று தமிழகம் வருகை: ராமேஸ்வரத்தில் நாளை அடக்கம் *
By Unknown 12:54 PM
முழு அரசு மரியாதையுடன் காலை 11 மணிக்கு இறுதிச்சடங்குராமேஸ்வரம்: மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உடல் இன்று காலை தமிழகம் கொண்டு வரப்படுகிறது. முழு அரசு மரியாதையுடன் நாளை காலை 11 மணிக்கு, அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் (84), நேற்று முன்தினம் காலமானார். மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் ஐஐஎம் கல்வி நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, திடீரென மயங்கி விழுந்த அவரை, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. கலாம் மறைவுச் செய்தியறிந்து நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. கலாமின் உடலை சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் மற்றும் ராமேஸ்வரம் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக நேற்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், ராமேஸ்வரத்தில் அரசு மரியாதையுடன் கலாமின் உடலை அடக்கம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பாதுகாப்பு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று காலை தமிழகம் வருகை: டெல்லியில் இருந்து கலாம் உடல் இன்று காலை 8 மணிக்கு தனி விமானம் மூலம் மதுரை வருகிறது. மதுரை விமானநிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியிலுள்ள ‘பருந்து’ விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மதியம் 1 மணிக்கு கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். உச்சிப்புளி விமானத்தளத்திலிருந்து ராணுவ வாகனம் மூலம் ராமேஸ்வரத்துக்கு உடல் கொண்டு வரப்படுகிறது.அங்கு தேசிய நெடுஞ்சாலையில் பஸ் ஸ்டாண்ட் அருகே அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் ராமேஸ்வரம் முஸ்லிம் பள்ளிவாசல் தெருவில் உள்ள கலாமின் சகோதரர் வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு உறவினர்கள், குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துகின்றனர். இரவு முழுவதும் அவரது வீட்டிலேயே உடல் வைக்கப்படுகிறது. நாளை இறுதி நிகழ்ச்சி: நாளை காலை 11 மணிக்கு முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, சிறப்பு தொழுகை செய்யப்படுகிறது. அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தங்கச்சிமடம் அருகில் அமைந்துள்ள பேக்கரும்பு கிராமத்திற்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு பிரதமர் மோடி, கவர்னர் ரோசையா, மத்திய, மாநில அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். பின்னர் அங்கேயே அவரது உடல் அடக்கம் செய்யப்படும். மண்ணின் மைந்தர் கலாம் உடலை எதிர்பார்த்து ராமேஸ்வரம் தீவு கண்ணீர் கடலில் ஆழ்ந்துள்ளது.பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்க உள்ளதால் ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் நேற்று ராமநாதபுரத்தில் நடந்தது. கலாமின் வீடு மற்றும் அஞ்சலி செலுத்தும் இடம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=158476 via http://j.mp/tamil_news
வாய்க்காலில் பள்ளி வேன் கவிழ்ந்து : 24 மாணவ, மாணவிகள் காயம்
By Unknown 3:37 AM
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு நேற்று மாலை தனியார் வேன் புறப்பட்டது. எழிலூர் செல்லியம்மன் கோயில் உண்டியலடி அருகில் வந்தபோது அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் வேன் கவிழ்ந்தது. வேனில் இருந்த 18 மாணவிகள், 6 மாணவர்கள் என 24 பேர் காயமடைந்தனர். அவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து பிரியதர்ஷினி, தேசிகா, வர்நிஷா, முகந்தன், சசிதரன் உள்ளிட்ட 9 மாணவ, மாணவிகள் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வேன் டிரைவர் நாராயணபுரகளப்பாலை சேர்ந்த முருகானந்தம் (43) என்பவரை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். Link: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=78803 via http://j.mp/tamil_news
ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் இறுதிச் சடங்கு
By Unknown 3:35 AM
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேற்று மாரடைப்பால் காலமானார். இதையடுத்து அவரது உடல், ராணுவ ஹெலிகாப்டரில் ஷில்லாங்கிலிருந்து, அசாம் மாநிலம் குவகாத்தி கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் அப்துல் கலாம் மறைவிற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் வாசிக்கப்பட்டது. ராமேஸ்வரத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கலாம் குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்போது iTunes இல் வெப்துனியா தமிழ் மொபைல் செயலியைப் பதிவிறக்க கிளிக் செய்யவும். ஆண்ட்ராய்டு மொபைல் செயலியைப் பதிவிறக்க கிளிக் செய்யவும். கட்டுரைகளைப் படித்து, எங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்திடுங்கள், ட்விட்டரில் எங்களைப் பின்பற்றுங்கள். Facebook Twitter Youtube Google+ iPhone Android Link: http://tamil.webdunia.com/article/regional-tamil-news/abdul-kalam-funeral-in-rameswaram-115072800018_1.html via http://j.mp/tamil_news
தமிழக பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: அரசு அறிவிப்பு
சென்னை, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் மறைவையட்டி, தமிழகம் முழுவதும் பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) விடுமுறை என தமிழக அரசு அறிவித்து உள்ளது.இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் எனும் இடத்தில் உள்ள ஐ.ஐ.எம். நிறுவனத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றார். அப்போது மேடையில் இருந்த அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு சரிந்தார். உடனடியாக அவர் ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அப்துல்கலாம் இறந்துவிட்டார் என்பதை உறுதிசெய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மாணவர்கள் மேல் மிகுந்த பாசமுள்ளவர். அதிகமாக மாணவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க விரும்புவார். இந்தநிலையில் அவரது மறைவு மாணவர்கள் சமுதாயத்திடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அவரது மறைவுக்கு தமிழக அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், நாளை (செவ்வாய்க்கிழமை) மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நேற்றிரவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Link: www.DailyThanthi.com/News/India/2015/07/27215557/TN-School-colleges--holidays-for-tomorrow--Government.vpf via http://j.mp/tamil_news
முன்னாள் ஜனாதிபதி திரு .அப்துல் கலாம் காலமானார்
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்.-ல் இன்று கருத்தரங்கு நடைபெற்றது. அதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாலை 6 மணியளவில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த அப்துல் கலாம் பெத்தானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மாரடைப்பால் காலமானார். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம். மேகாலயாவில் இந்திய மேலான் கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உறையாடிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டது. Link: http://www.tamilstar.com/tamil/news-id-a-p.-j.-abdul-kalam-27-07-1521544.htm via http://j.mp/tamil_news
குரூப்-2 தேர்வு இன்று நடக்கிறது: 1,241 காலியிடங்களுக்கு 6 லட்சம் பேர் போட்டி
By Unknown 11:06 PM
தமிழகம் முழுவதும் 1,511 மையங் களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு இன்று நடக்கிறது. 1,241 காலிப்பணியிடங் களுக்கு 6 லட்சத்து 20 ஆயிரம் பட்டதாரிகள் தேர்வு எழுதுகின்றனர். தமிழக அரசுத் துறைகளில் துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர், வருவாய் உதவியாளர் உட்பட 18 விதமான பதவிகளில் 1,241 காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலைத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. காலை 10 முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறும். தமிழகம் முழுவதும் 1,511 மையங்களில் 6 லட்சத்து 20 ஆயிரத்து 220 பட்டதாரிகள் தேர்வு எழுதுகின்றனர். சென்னையில் எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சாந்தோம் செயின்ட் பீட்ஸ் மேல்நிலைப் பள்ளி, ரோசரி மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 199 மையங்களில் 64 ஆயிரத்து 309 பேர் தேர்வு எழுத இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர். முறைகேடு நடக்காமல் தடுக்கும் வகை யில் மாவட்ட ஆட்சியர்கள், கோட்டாட்சி யர்கள், வட்டாட்சியர்கள் தலைமை யில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள் ளன. இவர்கள் தேர்வு மையங்களில் திடீர் சோதனை மேற்கொள்வர். தற்போது நடைபெறுவது முதல்கட்ட தேர்வான முதல்நிலைத்தேர்வு ஆகும். இதிலிருந்து, ஒரு காலியிடத்துக்கு 10 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் அடுத்தகட்ட தேர்வான மெயின் தேர் வுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். அதில் வெற்றி பெறு வோர் நேர்காணலுக்கு அழைக்கப்படு வர். இறுதியாக, மெயின் தேர்வு மதிப் பெண், நேர்காணல் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு பணி நியமனம் நடைபெறும். Link: http://tamil.thehindu.com/tamilnadu/குரூப்2-தேர்வு-இன்று-நடக்கிறது-1241-காலியிடங்களுக்கு-6-லட்சம்-பேர்-போட்டி/article7466728.ece via http://j.mp/tamil_news
செல்போன் பயன் படுத்தினால் கேன்சர் வரும்... ஷாக் தரும் ஆய்வு!
லண்டன் : செல்போன்கள் பயன்படுத்துவதால் வள்ர்சிதை மாற்றங்கள், புற்றுநோய் உள்பட பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. செல்போன் மற்றும் அதன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சுகளால் மனிதர்களுக்கு ஆபத்து என்று ஒரு சாராரும், இல்லை என மற்றொரு சாராரும் தொடர்ந்து ஆய்வுகள் மூலம் சொல்லி வருகின்றனர். இந்த நிலையில், புதிய ஆய்வு ஒன்றில் செல்போன் பயன்படுத்துவதால் உடல் செல்களில் மாற்றம் ஏற்படுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. for(var e,l='article aside figcaption figure footer header hgroup nav section time'.split(' ');e=l.pop();document.createElement(e)); கேன்சர் அபாயம்... 1/6 கேன்சர் அபாயம்... செல்போன்கள் பயன்படுத்துவதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. புற்றுநோய் மட்டுமின்றி வளர்சிதை மாற்றங்கள் உட்பட மேலும் பல நோய்கள் ஏற்படவும் செல்போன்கள் காரணமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. சுவாசக் கோளாறு... 2/6 சுவாசக் கோளாறு... மேலும், முறையற்ற வளர்ச்சிதை மாற்றங்களால் உடலில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் துகள்கள், ஆன்டி ஆக்சிடென்டுகளுடன் வினைபுரிய துவங்குவதால் சுவாச கோளாறுகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகின்றது. பாதிப்பு... 3/6 பாதிப்பு... செல்போனிலிருந்து வெளிவெரும் கதிர்வீச்சுக்களால் உடல் செல்களில் மாற்றங்கள் மற்றும் பாதிப்புகள் ஏற்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கின்றது. இதன் மூலம் புற்றுநோய் மட்டுமின்றி தொடர் தலைவலி, உடல்சோர்வு, தோல் வியாதிகள் போன்றவைகளும் வருகிறது என்கிறது. எச்சரிக்கை... 4/6 எச்சரிக்கை... இந்த பாதிப்புகள் தற்காலிகமானது அல்ல எனக் கூறும் இந்த ஆய்வு, இவை நீண்ட நாளைய பாதிப்புகளாக மாறவும் வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கின்றது. மேலும் இந்த ஆய்வில் மொபைல் போன் மட்டுமின்றி வயர்லெஸ் இன்டர்நெட் பயன்படுத்துவதாலும் புற்றுநோய் அபாயம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வயர்லெஸ் இன்டர்நெட்... 5/6 வயர்லெஸ் இன்டர்நெட்... ஏற்கனவே, கடந்த 2011ம் ஆண்டு சர்வதேச புற்றுநோய் ஆய்வுக்கழகம் நடத்திய ஆய்விலும் கதிர்வீச்சுக்களால் தான் புற்றுநோய் அதிகம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Link: http://tamil.oneindia.com/news/international/mobile-phones-can-actually-cause-cancer-study-231903.html via http://j.mp/tamil_news
அகில இந்திய ஆக்கி இறுதிப்போட்டிக்கு ஐ.ஒ.சி தகுதி பெறுமா?: பஞ்சாப் சிந்து வங்கியுடன் இன்று பலப்பரீட்சை
89–வது அகில இந்திய எம்.சி.சி– முருகப்பா தங்க கோப்பைக்கான ஆக்கிப்போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்தப்போட்டியின் ‘லீக்’ ஆட்டம் நேற்று முன்தினம் முடிவடைந்தன. இதன்படி ‘ஏ’ பிரிவில் இருந்து ஐ.ஒ.சி (இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்), மத்திய கணக்கு தணிக்கை குழு (சி.ஏ.ஜி) ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இருந்து ராணுவம் லெவன், பஞ்சாப் சிந்து வங்கி ஆகிய அணிகளும் அரை இறுதிக்கு முன்னேறின. நாம்தாரி, கர்நாடகா, மும்பை (‘ஏ’ பிரிவு), ரெயில்வே, ஐ.ஒ.பி, செய்ல் (‘பி’ பிரிவு) ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன. நேற்றைய ஓய்வுக்கு பிறகு அரை இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் ஐ.ஒ.சி– பஞ்சாப் சிந்து வங்கி அணிகள் மோதுகின்றன. ஐ.ஒ.சி. ‘லீக்’ ஆட்டத்தில் 3 வெற்றி பெற்றது. ஒரு ‘டிரா’ செய்தது. தோல்வி அடைய வில்லை. பஞ்சாப் சிந்து வங்கிக்கும் இதே நிலை தான். இதனால் ஐ.ஒ.சி இறுதிப்போட்டியில் நுழைய கடுமையாக போராட வேண்டும். மாலை 4 மணிக்கு நடைபெறும் மற்றொரு அரை இறுதியில் ராணுவ லெவன்–சி.ஏ.ஜி அணிகள் மோதுகின்றன. Link: http://www.maalaimalar.com/2015/07/25124823/Will-India-qualify-for-the-IOC.html via http://j.mp/tamil_news
ஒரு லிட்டர் நீரில் 500 கிலோமீட்டர் ஓடும் அற்புத பைக்: பிரேசில் நாட்டுக்காரரின் அபூர்வ கண்டுபிடிப்பு ரியோ டி ஜெனிரோ
ஒரு லிட்டர் வெறும் தண்ணீரில் சுமார் 500 கிலோமீட்டர் தூரத்துக்கு தங்குதடையின்றி செல்லக்கூடிய அற்புதமான மோட்டார் சைக்கிளை பிரேசில் நாட்டிலுள்ள சாவ் பாலோ நகரை சேர்ந்த ரிக்கேர்டோ ஆஸேவெடோ என்பவர் கண்டுபிடித்துள்ளார். இந்த மோட்டார் சைக்கிள் சாதாரண தண்னீரில் ஓடுவதோடு, பெட்ரோல், டீசலில் ஓடும் வாகனங்களைப்போல் நச்சுத்தன்மை கொண்ட கார்பன் மோனாக்சைடு போன்ற வேதிப் பொருட்களை வெளியேற்றுவதில்லை. மாறாக, வெறும் நீராவியை மட்டுமே வெளியேற்றுகின்றது, என்பது குறிப்பிடத்தக்கது. ‘டி பவர் ஹெச்20’ (T Power H20) என இந்த புதிய மோட்டார் சைக்கிளுக்கு பெயரிட்டுள்ள ரிக்கேர்டோ ஆஸேவெடோ, இதன் செயல்திறன் குறித்த விளக்கத்தையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த மோட்டார் சைக்கிளில் அமைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான பேட்டரியில் இருந்து கொள்கலத்தில் ஊற்றப்பட்ட தண்ணீரில் பாய்ச்சப்படும் மின்சாரமானது, அந்த தண்ணீரில் உள்ள மூலக்கூறுகளில் பொதிந்திருக்கும் ஹைட்ரஜன் எனப்படும் நீரியத்தின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது. இதன்வாயிலாக கிடைக்கும் உந்துசக்தி மூலம் காற்றை கிழித்துக் கொண்டு பறக்கும் இந்த மோட்டார் சைக்கிள், ஒரு லிட்டர் தண்ணீரில் சுமார் 500 கிலோமீட்டர் வரை செல்லும் மாயாஜாலத்தை ரிக்கேர்டோ ஆஸேவெடோ ஆதாரப்பூர்வமாக நிகழ்த்தியும், நிரூபித்தும் காட்டியுள்ளார். தற்போதைய குடிநீர் பஞ்ச காலத்தில் சென்னைவாசிகள் இந்த அற்புத பைக் செய்தியை ரசிப்பார்களோ.., இல்லையோ..? அவரது சாகச வீடியோவையாவது கண்டுகளிக்கலாம்..., Link: http://www.maalaimalar.com/2015/07/25135804/Brazilian-man-invents-motorcyc.html via http://j.mp/tamil_news
ATM ல் கிடைத்த 26 லட்சத்தை ஒப்படைத்த அப்துல் லத்தீஃப்.
By Unknown 1:32 AM
ஹைதராபாத் SR நகரில் வசித்து வரும் மாணவர் அப்துல் லத்தீப். கல்லூரியில் பயின்று வரும் இவர், நேற்று காலை தனது முஸ்லிம் நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஓர் அரசு வங்கிக்கு சொந்தமான ATM மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
ATM கார்டை சொருகி கடவுச்சொல்லையும் அழுத்தி அவருக்கு தேவையான ரூ 200 அழுத்தியுள்ளார். ஆனால் இயந்திரம் திடீரென திறந்துகொண்டு ரூ 26 லட்சம் சடசடவென வெளியே வந்துள்ளது.
அந்த ATM மில் கேமராவும் இல்லை, செக்கியூரிட்டியும் இல்லை. 200 ரூபாய் எடுக்க சென்ற மாணவன் அப்துல் லத்தீபுக்கு 26 லட்சத்தை கண்டும் தன்னுடைய முஸ்லிம் நண்பனை அங்கேயே நிற்க வைத்துவிட்டு அருகிலிருந்த SR நகர் காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக வந்த காவல்துறை அதிகாரிகள் வங்கி நிர்வாகிகளுக்கும் தகவல் கொடுத்தனர். அனைவரும் அங்கு வந்து பார்த்த போது 26 லட்சமும் அங்கேயே இருந்துள்ளது.
அனைவரும் ஒரு நொடியின் அதிர்ச்சியடைந்து மாணவன் அப்துல் லத்தீபை கட்டியணைத்தனர். ATM இயந்திரம் சரி செய்யப்பட்டது. நெஞ்சை நெகிழ செய்த உணர்ச்சிமிகு இந்த சம்பவத்திற்கு ஆளான மாணவன் அப்துல் லத்தீபை அனைவரும் வெகுவாக பாராட்டினர்.
போலீஸ் கமிஷனர் மகேந்திர ரெட்டி அந்த மாணவனைப் பாராட்டி பணமுடிப்பும் கொடுத்து கவுரவப்படுத்தியுள்ளார்.
தகவல் உதவி.. இந்தியன் எக்ஸ்பிரஸ் 21-09-2014
இந்த செய்தியை பெரும்பாலான ஊடகங்கள் வழக்கம் போல் மறைத்து விடும். குர்ஆன் காட்டிய வழியில் நடைபோடும் இந்த லத்தீஃப்தான் உண்மையான முஸ்லிம்.
வேலையில்லா பட்டதாரியான இவருக்கு பணத்தின் தேவை எவ்வளவு என்பது நமக்கும் தெரியும். ஆனால் தன்னைப் படைத்த இறைவன் பார்த்துக் கொண்டுள்ளான். மறுமையில் இதற்கான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி வரும் என்ற பயத்தினாலேயே இந்த காரியத்தை செய்துள்ளார் லத்தீஃப்.
இது போன்ற கல்லூரி மாணவர்களை அதிகமதிகம் இறைவன் உருவாக்குவானாக!
திருமண பதிவு கட்டாயமல்ல; உயர்நீதிமன்ற தீர்ப்பு. தமுமுக வரவேற்பு.
By Unknown 1:31 AM
திருமணத்தை பதிவு செய்வது கட்டாயமில்லை என்றும் திருமணத்தை பதிவு செய்யவில்லை என்பதை காரணம் காட்டி ஒருவருடைய உரிமையை பறிக்க முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எஸ். வைத்திய நாதன் வழங்கியுள்ள தீர்ப்பை தமுமுக வரவேற்கின்றது. இந்த தீர்ப்பு ஆறுதலையும் தெளிவையும் தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கியுள்ளது. முஸ்லிம் திருமணங்கள் ஜமாத்துக்களில் பதிவு செய்யப்பட்டு வருவது நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் நிகழ்வாகும். இந்த யதார்த்த நிலைக்கு மாறாக கடந்த சில http://muthupetnews.com/httpmuthupetnews-comp26018/#noredirect
மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த அரசுப்பள்ளி பிளஸ்2 மாணவர்கள் 6 பேர் நீக்கம்
மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்து ஆசிரியரிடம் தகராறு செய்த அரசுப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் 6 பேர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்2 மாணவர்கள் 6 பேர் 10 நாட்களுக்கு முன் பள்ளிக்கு மது குடித்து விட்டு வந்து வகுப்பறையில் ஆசிரியரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தலைமை ஆசிரியர் சிவகாமி, மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து 6 பேரின் மாற்று சான்றிதழை கொடுத்து பள்ளியில் இருந்து நீக்கினார். அதன் பின் மாணவர்களின் பெற்றோர்கள் பலமுறை தலைமை ஆசிரியரை நேரில் சந்தித்து பள்ளியில் சேர்த்துக்கொள்ளுமாறு வலியுறுத்தியதாக தெரிகிறது. அவர் மறுத்துவிட்ட நிலையில் நீக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் பெற்றோருடன் ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியை நேரில் சந்தித்து முறையிட்டார். அப்போது மாணவரை கண்டித்த ஆட்சியர் அறிவுரை கூறி அனுப்பிவைத்தார். இதனையடுத்து 6 மாணவர்களையும் எச்சரித்து மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்ள உரிய நடவடிக்கையெடுக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் எஸ்.கோபிதாஸிடம் கேட்டபோது, மாணவர்கள் பள்ளியில் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்டதால், தலைமை ஆசிரியர் 6 மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்கியுள்ளார். மாணவர்கள் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அதை தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளேன் என்றார். Link: http://www.dinamani.com/tamilnadu/2015/07/24/மது-அருந்திவிட்டு-பள்ளிக்க/article2937909.ece via http://j.mp/tamil_news
abivai