புதுடில்லி: டில்லிக்கு தனி மாநில அந்தஸ்து தருவதற்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விருப்பம் தெரிவிக்கிறார்.டில்லிக்கு இன்னமும் முழுமையான மாநில அந்தஸ்து தரப்படவில்லை. கடந்த சட்டசபை தேர்தலின்போது, டில்லிக்கு தனி மாநில அந்தஸ்து பெற்றுத்தருவோம் என்ற வாக்குறுதியை ஆம் ஆத்மி கட்சி முன் வைத்து, ஓட்டுகளை பெற்றது.தற்போது மீண்டும் இந்த கோரிக்கையை எழுப்பி வருகிறது. இது குறித்து கெஜ்ரிவால் கூறியதாவது:டில்லிக்கு மாநில அந்தஸ்து தருவதா வேண்டாமா என டில்லி மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இது மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு என்று கூறியுள்ளார்.இதற்கான ஆயத்த பணிகளை செய்யுமாறு, நகர்ப்புற வளர்ச்சித் துறையை கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.மத்திய அரசு மறுப்பு: ஆனால் மத்திய அரசுக்கு இதில் விருப்பம் இல்லை. இது குறித்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறும்போது, நாட்டின் தலைநகராக டில்லி இருப்பதால், இவ்விஷயத்தில் உடனடி முடிவுக்கு வர முடியாது. நாடு முழுவதும் உள்ள விருப்பம் தெரிவித்தால் தான் இதில் முடிவெடுக்க முடியும். முழு மாநிலம் ஆகும் வரை, அனைத்து அதிகாரங்களையும் டில்லி அரசுக்கு தர முடியாது என்றார். Link: http://www.dinamalar.com/news_detail.asp?id=1290168 via http://j.mp/tamil_news
Home
டில்லிக்கு மாநில அந்தஸ்து: பொது வாக்கெடுப்பு நடத்த கெஜ்ரிவால் ஆசை
டில்லிக்கு மாநில அந்தஸ்து: பொது வாக்கெடுப்பு நடத்த கெஜ்ரிவால் ஆசை
By Unknown 8:32 AM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “டில்லிக்கு மாநில அந்தஸ்து: பொது வாக்கெடுப்பு நடத்த கெஜ்ரிவால் ஆசை”