BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

கோவளம் அருகே கடலில் மிதந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள புதிய சொகுசு கார் போலீஸ் விசாரணை

திருப்போரூர், கோவளம் அருகே கடலில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள புதிய ‘ஆடி’ சொகுசு கார் மிதந்தது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.கடலில் மிதந்த கார் சென்னையை அடுத்த கோவளம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் வழக்கம்போல நேற்று காலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது கடலில் இருந்து 10 மீட்டர் தூரத்தில் ஒரு கார் அலையில் சிக்கி மிதந்து கொண்டிருப்பதை பார்த்தனர். உடனடியாக மீனவர்கள் 20 பேர் மீன் பிடிக்க பயன்படுத்தும் கயிறுகளை பயன்படுத்தி காரை கரைக்கு இழுத்துவர முயற்சித்தனர்.அப்போது கடல் சீற்றமாக இருந்ததாலும், சூரைக்காற்று வீசியதாலும் காரை கரைக்கு இழுத்து வருவது சிரமமாக இருந்தது. அதோடு பாறை இடுக்குகளில் அந்த கார் சிக்கி இருந்ததால் இழுக்க முடியவில்லை. இதுபற்றி கேளம்பாக்கம் போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர்.ரூ.40 லட்சம் ‘ஆடி’ கார் கேளம்பாக்கம் போலீசார் கோவளம் கடற்கரைக்கு விரைந்து வந்தனர். அந்த காரை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். அப்போது தான் அது விலை உயர்ந்த ‘ஆடி‘ சொகுசு கார் என்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கும்.அதோடு அந்த கார் பதிவு எண் இன்னும் வழங்கப்படாத புதிய கார் என்பதும் தெரிந்தது. அந்த காரின் கதவுகள் மூடி இருந்ததால் காரை திறந்து சோதனையிட்டனர். அந்த காருக்குள் ஒரு செல்போன் மற்றும் ஒரு மணிபர்ஸ் ஆகியவை இருந்தது.போலீஸ் விசாரணை இதுகுறித்து கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரபாபு தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த கார் எப்படி கடற்கரைக்கு வந்தது. அதனை யார் அங்கு விட்டுச் சென்றது என்பது குறித்து விசாரணை நடத்திவந்தனர்.இந்த நிலையில் சென்னை கவுரிவாக்கத்தை சேர்ந்த யுவா பவுண்டேசன் உரிமையாளர் வில்லியம் என்பவர் கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தனது காரை காணவில்லை என்று புகார் செய்தார். வில்லியம் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:–காரை கடத்திச் சென்றனர் நான் கல்குவாரி நடத்தி வருகிறேன். என்னிடம் எனது அத்தை மகன் ஜோஸ்வா (வயது 27) என்பவர் கார் டிரைவராக இருந்து வருகிறார். சம்பவத்தன்று எனது புதிய சொகுசு காரை கொடுத்து தொழில் சம்பந்தமாக ஒருவரை பார்ப்பதற்காக அனுப்பி வைத்தேன்.அவர் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரத்திற்கு சென்று கொண்டு இருந்தபோது முட்டுக்காடு அருகே காரை சாவியோடு ஓரமாக நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது மர்ம நபர்கள் காரை கடத்திச்சென்று விட்டனர். பின்னர் இதுபற்றி ஜோஸ்வா எனக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையில் கார் கோவளம் கடலில் மிதப்பதாக தகவல் கிடைத்ததும் உடனடியாக போலீசில் புகார் செய்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். Link: www.DailyThanthi.com/News/State/2015/07/03042132/KovalamFloating-in-the-sea-of-new-luxury-car-worth.vpf via http://j.mp/tamil_news


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “கோவளம் அருகே கடலில் மிதந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள புதிய சொகுசு கார் போலீஸ் விசாரணை