BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

தங்கம் விலை மேலும் சரிவு : நகை வாங்க மக்கள் ஆர்வம்

மும்பை: சர்வதேச மார்க்கெட்டில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், நகை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தங்க நகை விற்பனை அதிகரித்துள்ளது.சர்வதேச அளவில் தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகள் சீனாவும் இந்தியாவும். சீன நாட்டினருக்கு தங்க நகை மீது நம்மைப் போல் ஆர்வம் கிடையாது. ஆனால் முதலீட்டுக்காக அவர்கள் இந்தியாவை விட அதிக அளவில் வாங்கி வைத்தனர்.தற்போது ஷாங்கை தங்க மார்க்கெட்டில், தங்கத்தை சீனர்கள் விற்கத் துவங்கி உள்ளனர். இதனால் தங்கத்தின் விலை சர்வதேச மார்க்கெட்டில் தடாலடியாக குறையத் துவங்கியது.சீனாவில் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவாக 4 சதவீதம் தங்கம் விலை சரிந்தது. இதனால் இந்தியர்கள் அதிகம் தங்கம் வாங்குவர் என சர்வதேச மார்க்கெட்டில் எதிர்பார்ப்பு எகிறியது.விற்பனை உயர்வு : எதிர்பார்த்தது போல தங்கத்தின் விற்பனை இந்தியாவில் அதிகரிக்கத் துவங்கி உள்ளது.காமர்ஸ் வங்கி மூத்த ஆய்வாளர் கார்ஸ்டன் பிரிட்ச் இது குறித்து கூறும்போது, உலக அளவில் தங்கத்தை விரும்புவது இந்திய துணைக்கண்ட நாடுகள் தான். இந்த விலை சரிவு, அப்பகுதியில் தங்க விற்பனையை அதிகரிக்கும். இத்தனைக்கும் இது திருமண காலம் கிடையாது. இப்போதே இந்த அளவு விற்பனையானால், திருமண காலத்தில் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம் என்றார்.இருப்பினும் இது குறித்து மாற்றுக் கருத்தும் இருக்கிறது. சென்னையை சேர்ந்த ஒரு தங்க நகை விற்பனையாளர் கூறும்போது, எதிர்பார்த்த அளவுக்கு தங்கம் விற்பனை உயரவில்லை. தங்கத்தின் விலை மேலும் குறையும் என பலர் எதிர்பார்த்து இருப்பது தான் இதற்கு காரணம் என்றார். Link: http://www.dinamalar.com/news_detail.asp?id=1301862 via http://j.mp/tamil_news


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “தங்கம் விலை மேலும் சரிவு : நகை வாங்க மக்கள் ஆர்வம்