கோவில்பட்டி, ஜூலை 2- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் முதலாவது தெருவைச் சேர்ந்த அப்பாசாமி மகன் சுரேன் என்ற ராமகிருஷ்ணன் (வயது 28). மில் தொழிலாளி. இவர் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த சுப்புசெல்வியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதில் ஆத்திரம் அடைந்த சுப்புசெல்வியின் அண்ணன்கள் உள்பட 6 பேர் கடந்த 22-ந்தேதி சுரேனை வெட்டிக் கொலை செய்தனர். கொலை தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொலை தொடர்பாக பொன்முத்துபாண்டி (23), அந்தோணிராஜ் (24) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் சுப்புசெல்வியின் அண்ணன் சின்னராஜ் (28) மற்றும் முத்துகுமார் (25) ஆகிய 2 பேரும் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதற்கிடையே சுரேன் கொலை தொடர்பாக கோவில்பட்டி ஜோதிநகர் 4-வது தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சுந்தர்ராஜ் (20) என்பவர் கோவில்பட்டி 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். அவரை 15 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி வீரணன் உத்தரவிட்டார். தலைமறைவான சுப்புசெல்வியின் மற்றொரு அண்ணன் ராஜபாண்டி (30), முத்துலட்சுமி ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். Link: http://www.maalaimalar.com/2015/07/02031102/worker-murder-case-court-youth.html via http://j.mp/tamil_news
Home
மில் தொழிலாளி கொலையில் கோவில்பட்டி கோர்ட்டில் வாலிபர் சரண்
மில் தொழிலாளி கொலையில் கோவில்பட்டி கோர்ட்டில் வாலிபர் சரண்
By Unknown 2:56 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “மில் தொழிலாளி கொலையில் கோவில்பட்டி கோர்ட்டில் வாலிபர் சரண் ”