ஞாயிற்றுக்கிழமை, 5, ஜூலை 2015 (20:36 IST) சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கண்ணாடி கதவு உடைந்து விழுந்ததுசென்னை மீனம்பாக்கத்தில் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள விமான நிலையத்தில் கண்ணாடி கதவுகள் மற்றும் தடுப்புகள் உடைந்து விழும் சம்பவம் வாடிக்கையாகி விட்டது.ஒப்பந்ததாரர்களின் தரமற்ற பணிகளால் கண்ணாடி, பால் சீலிங், டைல்ஸ் கற்கள் போன்றவை இங்கு அடிக்கடி உடைந்து விழுகின்றன. இதுவரை நாற்பது முறைக்கும் அதிகமாக இதுபோன்ற விபத்துகள் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.இந்நிலையில், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வி.ஐ.பி.க்கள் வெளியே வருவதற்கு பயன்படுத்தப்படும் இரண்டாவது நுழைவு வாயில் பகுதியில் உள்ள ஒரு கண்ணாடி கதவு இன்று திடீரென்று உடைந்து கீழே விழுந்தது. இந்த சம்பவத்துக்கு சிறிது நேரம் கழித்து அவ்வழியாக வெளியேற வந்த புதுவை கவர்னர் அஜய் குமார் சிங், தரையில் கிடந்த அந்த கண்ணாடி சிதறல்கள் எல்லாம் சுத்தப்படுத்தப்படும் வரை சில நிமிடங்கள் காத்திருந்து, பின்னர் தனது கார் நின்ற இடத்துக்கு செல்ல நேர்ந்தது. Link: http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=146273 via http://j.mp/tamil_news
Home
சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கண்ணாடி கதவு உடைந்து விழுந்தது
சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கண்ணாடி கதவு உடைந்து விழுந்தது
By Unknown 1:49 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கண்ணாடி கதவு உடைந்து விழுந்தது”