ஜூலை.13- மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தாக்கல் செய்த கடந்த பட்ஜெட்டில், ரெயில்வே சரக்கு போக்குவரத்து கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 85 மெட்ரிக் டன் அளவு உயரும் என அறிவித்திருந்தார். ஆனால் இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் எதிர்விளைவையே ஏற்படுத்தி உள்ளது. தற்போது பயணிகள் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த மாதத்தில் ரெயிலில் பயணித்தோரின் எண்ணிக்கை சுமார் 204 கோடி. இது 2014-ம் ஆண்டு ஜூன் மாதத்தை (சுமார் 223 கோடி) விட 8.66 சதவீதம் குறைவாகும். சாலைகள் தற்போது சீரமைக்கப்பட்டு இருப்பதால் பயணிகள் சாலைப்பயணத்தை விரும்புவதாலும், டிக்கெட் இன்றி ரெயில் பயணம் மேற்கொள்வது அதிகரித்து வருவதாலும் இந்த வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால், ரெயில் பயணிகள் மூலம் ஈட்ட வேண்டிய வருவாய் இலக்கு என பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்த ரூ.50 ஆயிரத்து 175 கோடியை எட்டுவது கடினம் என்று ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. Link: http://www.maalaimalar.com/2015/07/13022342/In-June-the-number-of-rail-pa.html via http://j.mp/tamil_news
Home
ஜூன் மாதத்தில் ரெயில் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது புதுடெல்லி,
ஜூன் மாதத்தில் ரெயில் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது புதுடெல்லி,
By Unknown 4:31 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “ஜூன் மாதத்தில் ரெயில் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது புதுடெல்லி,”