BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு: இறுதி முடிவு இன்று வெளியீடு

மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான தேர்வின் இறுதி முடிவுகள் சனிக்கிழமை (ஜூலை 4) வெளியிடப்பட உள்ளன. தேர்வு முடிவுகளை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வை ஒவ்வொரு ஆண்டும் மத்தியப் பணியாளர் தேர்வு ணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. இது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடத்தப்படும். 2014-ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் 24-இல் நடத்தப்பட்டது. இதற்கான முடிவு அக்டோபர் 14-இல் வெளியிடப்பட்டது. பின்னர் முதன்மைத் தேர்வு டிசம்பர் 14 முதல் 20-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் இந்த ஆண்டு ஏப்ரல் 12-இல் வெளியிடப்பட்டன. அதில் தகுதி பெற்றவர்களுக்கான கடைசித் தேர்வான நேர்முகத் தேர்வு கடந்த மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, குடிமைப் பணிகள் 2014 தேர்வுக்கான இறுதி முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட உள்ளதாக, யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. Link: http://www.dinamani.com/tamilnadu/2015/07/04/ஐஏஎஸ்-ஐபிஎஸ்-தேர்வு-இறுதி-மு/article2900766.ece via http://j.mp/tamil_news


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு: இறுதி முடிவு இன்று வெளியீடு