பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்டில் கருணாரத்னே சதம் அடிக்க இலங்கை அணி முதல் இன்னிங்சில் கவுரவமான ஸ்கோரை எட்டியது. இப்போட்டியிலும் பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா அசத்தி வருகிறார்.பாகிஸ்தான், இலங்கை இடையேயான 2 டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. முக்கியமான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் பல்லேகேலேவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை 1 விக்கெட் இழப்புக்கு 106 ரன் என வலுவான நிலையில் இருந்த போது யாசிர் ஷா தனது சுழலில் நெருக்கடி கொடுத்தார். 2 டெஸ்டிலும் அசத்திய அவர், அடுத்தடுத்து 4 விக்கெட் வீழ்த்த இலங்கை அணி தடுமாறியது.ஆனாலும், ஒருமுனையில் துவக்க ஆட்டக்காரர் கருணாரத்னே பொறுமையாக ஆடி சதம் அடிக்க இலங்கை அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது. கருணாரத்னே 130 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்களுடன் உள்ளது. தரிண்டு கவுஷல் 17, லக்மல் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=154070 via http://j.mp/tamil_news
Home
3வது டெஸ்டிலும் யாசிர் மிரட்டல் : கருணாரத்னே சதத்தால் தப்பியது இலங்கை அணி பல்லேகேலே:
3வது டெஸ்டிலும் யாசிர் மிரட்டல் : கருணாரத்னே சதத்தால் தப்பியது இலங்கை அணி பல்லேகேலே:
By Unknown 3:53 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “3வது டெஸ்டிலும் யாசிர் மிரட்டல் : கருணாரத்னே சதத்தால் தப்பியது இலங்கை அணி பல்லேகேலே: ”