BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

மங்களூருவில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் கல்லீரல் விமானத்தில் பெங்களூருவுக்கு வந்தது வாலிபருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது

பெங்களூரு, மங்களூருவில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் கல்லீரல் விமானம் மூலம் பெங்களூருவுக்கு கொண்டு வரப்பட்டு வாலிபருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.மூளைச்சாவு அடைந்த பெண் தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு அருகே அட்டாவர் காப்ரிகுட்டே பகுதியில் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை நடத்தி வந்தவர் லீனா (வயது 42). இவருடைய கணவர் பினோய் ஜான். இவர் காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 1–ந் தேதி மங்களூரு வேலன்சியா சர்க்கிள் பகுதியில் லீனா மொபட்டில் சென்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அவரது மொபட் மீது மோதியது. இதில், மொபட்டில் இருந்து லீனா தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.இதையடுத்து அவர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் கடந்த 2–ந் தேதி லீனா மூளைச்சாவு அடைந்தார். இதுகுறித்து டாக்டர்கள் அவருடைய குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். அதைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து லீனாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவருடைய குடும்பத்தினர் முன்வந்தனர்.விமானம் மூலம் பெங்களூருவுக்கு... இதைதொடர்ந்து தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரி டாக்டர்களை தொடர்பு கொண்டனர். அப்போது, கல்லீரல் பாதிக்கப்பட்ட பெங்களூரு ராஜாஜி நகர் சிவனஹள்ளி பகுதியை சேர்ந்த சோமசேகர் (35) என்பவர் விக்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. இதையடுத்து, லீனாவின் கல்லீரலை சோமசேகருக்கு பொருத்த டாக்டர்கள் முடிவு செய்தனர்.அதைத்தொடர்ந்து, 6 டாக்டர்கள் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் காலையில் பெங்களூருவில் இருந்து மங்களூரு தனியார் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றனர். பின்னர் அவர்கள் அறுவை சிகிச்சை மூலம் லீனாவின் உடலில் இருந்த கல்லீரலை எடுத்துக் கொண்டு பாதுகாப்பாக பெட்டியில் வைத்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மங்களூரு பஜ்பே விமான நிலையத்திற்கு சென்றனர்.பின்னர், அங்கிருந்து அவர்கள் விமானம் மூலம் மதியம் 1 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்தை வந்தடைந்தனர். அதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் போக்குவரத்து தடை செய்யப்பட்ட சாலை வழியாக பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 38 கிலோ மீட்டர் தொலைவை 32 நிமிடத்தில் கடந்து விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு கல்லீரல் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது.முதல் முறை பின்னர் விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சோமசேகருக்கு லீனாவின் கல்லீரலை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர் நாகேஷ் தலைமையிலான குழுவினர் வெற்றிகரமாக பொருத்தினார்கள். அரசு ஆஸ்பத்திரியில் கல்லீரல் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பொருத்தப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும்.இதுகுறித்து மாநில உடல் உறுப்பு தானம் மையத்தின் அதிகாரி மஞ்சுளா கூறுகையில், ‘அரசு ஆஸ்பத்திரியில் சிறுநீரகம் உள்பட சில உடல் உறுப்புகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டு உள்ளது. ஆனால் கல்லீரல் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பொருத்தப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும்’ என்றார். Link: www.DailyThanthi.com/News/State/2015/07/05013715/Reaching-studThe-girls-liverThe-plane-came-to-Bangalore.vpf via http://j.mp/tamil_news


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “மங்களூருவில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் கல்லீரல் விமானத்தில் பெங்களூருவுக்கு வந்தது வாலிபருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது