BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

ஹெல்மெட் அணியாதவர்கள் 1.30 லட்சம் பேர் மீது வழக்கு: தமிழக அரசு தகவல்!

ஹெல்மெட் அணியாதவர்கள் 1.30 லட்சம் பேர் மீது வழக்கு: தமிழக அரசு தகவல்! சென்னை: ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற புகாரில் 1.30 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 1ஆம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஹெல்மெட் அணியாதவர்களின் வாகன ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் போட்டி போட்டு ஹெல்மெட் வாங்கினார்கள். இதன்காரணமாக ஹெல்மெட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய்க்கு விற்ற ஹெல்மெட்களை லாபம் பார்க்க நினைத்த வியாபாரிகள் மூன்று மடங்கு விலையை உயர்த்தி விற்று கொள்ளையடித்தனர். இதனால் பொது மக்கள் குமுறினர். அதைத்தொடர்ந்து தமிழக அரசு ஹெல்மெட் விலை உயர்வுக்கு கடிவாளம் போட அதிகாரிகளை நியமித்தது. அவர்களும் கடமைக்கு பணி செய்தார்கள். ஒன்றாம் தேதி 1101 பேரும், இரண்டாம் தேதி 1306 பேரும், மூன்றாம் தேதி 1066 பேரும், 4ஆம் தேதி 924 பேரும், 5ஆம் தேதி 815 பேரும், 6ஆம் தேதி 488 பேரும் காவல்துறையினரிடம் ஹெல்மெட் அணியாமல் சிக்கினார்கள். இந்நிலையில், ஹெல்மெட் வழக்குகளை சனிக்கிழமை மற்றும் மாலை நேர நீதிமன்றங்களில் விசாரிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று கோரிக்கை வைத்துள்ளது. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், மாவட்டம் வாரியாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தார். அதில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற புகாரில் 1.30 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 14,503 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்குகள் அதிகமாக இருப்பதால் நடமாடும் நீதிமன்றங்களால் விசாரிக்க முடியவில்லை. இதனால் தலைக்கவச வழக்குகளை சனிக்கிழமை மற்றும் மாலை நேர நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரை அழைத்து நீதிபதி கருத்து கேட்டார். பின்னர் வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார். -மகேஷ் Link: http://www.vikatan.com/news/article.php?aid=49395 via http://j.mp/tamil_news


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “ஹெல்மெட் அணியாதவர்கள் 1.30 லட்சம் பேர் மீது வழக்கு: தமிழக அரசு தகவல்!