ஹைதராபாத் SR நகரில் வசித்து வரும் மாணவர் அப்துல் லத்தீப். கல்லூரியில் பயின்று வரும் இவர், நேற்று காலை தனது முஸ்லிம் நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஓர் அரசு வங்கிக்கு சொந்தமான ATM மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
ATM கார்டை சொருகி கடவுச்சொல்லையும் அழுத்தி அவருக்கு தேவையான ரூ 200 அழுத்தியுள்ளார். ஆனால் இயந்திரம் திடீரென திறந்துகொண்டு ரூ 26 லட்சம் சடசடவென வெளியே வந்துள்ளது.
அந்த ATM மில் கேமராவும் இல்லை, செக்கியூரிட்டியும் இல்லை. 200 ரூபாய் எடுக்க சென்ற மாணவன் அப்துல் லத்தீபுக்கு 26 லட்சத்தை கண்டும் தன்னுடைய முஸ்லிம் நண்பனை அங்கேயே நிற்க வைத்துவிட்டு அருகிலிருந்த SR நகர் காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக வந்த காவல்துறை அதிகாரிகள் வங்கி நிர்வாகிகளுக்கும் தகவல் கொடுத்தனர். அனைவரும் அங்கு வந்து பார்த்த போது 26 லட்சமும் அங்கேயே இருந்துள்ளது.
அனைவரும் ஒரு நொடியின் அதிர்ச்சியடைந்து மாணவன் அப்துல் லத்தீபை கட்டியணைத்தனர். ATM இயந்திரம் சரி செய்யப்பட்டது. நெஞ்சை நெகிழ செய்த உணர்ச்சிமிகு இந்த சம்பவத்திற்கு ஆளான மாணவன் அப்துல் லத்தீபை அனைவரும் வெகுவாக பாராட்டினர்.
போலீஸ் கமிஷனர் மகேந்திர ரெட்டி அந்த மாணவனைப் பாராட்டி பணமுடிப்பும் கொடுத்து கவுரவப்படுத்தியுள்ளார்.
தகவல் உதவி.. இந்தியன் எக்ஸ்பிரஸ் 21-09-2014
இந்த செய்தியை பெரும்பாலான ஊடகங்கள் வழக்கம் போல் மறைத்து விடும். குர்ஆன் காட்டிய வழியில் நடைபோடும் இந்த லத்தீஃப்தான் உண்மையான முஸ்லிம்.
வேலையில்லா பட்டதாரியான இவருக்கு பணத்தின் தேவை எவ்வளவு என்பது நமக்கும் தெரியும். ஆனால் தன்னைப் படைத்த இறைவன் பார்த்துக் கொண்டுள்ளான். மறுமையில் இதற்கான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி வரும் என்ற பயத்தினாலேயே இந்த காரியத்தை செய்துள்ளார் லத்தீஃப்.
இது போன்ற கல்லூரி மாணவர்களை அதிகமதிகம் இறைவன் உருவாக்குவானாக!













0 thoughts on “ATM ல் கிடைத்த 26 லட்சத்தை ஒப்படைத்த அப்துல் லத்தீஃப். ”