சென்னை: நேபாள பூகம்ப நிவாரண நிதியாக தமிழகத்தில் வசூலான ரூ. 7,08,854 உட்பட முதல் கட்டமாக 15 லட்சம் நிவாரண நிதியை SDPI கட்சியின் தேசிய தலைமை சார்பாக நேபாள தூதர் தீப் குமார் உபத்யாயிடம் நேரில் வழங்கப்பட்டது.
SDPI கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முஹைதீன் அவர்கள் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
நேபாள நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தால் பல்லாயிரகணக்கான மக்களுக்கு பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டன. இதில் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்காக SDPI கட்சி தேசிய தலைமை அறிவிப்பின் படி தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், முக்கிய நகரங்களில் SDPI கட்சி தொண்டர்கள் நிதி வசூல் செய்தனர்.
இதில் 7,08,854 ரூபாய் வசூல் செய்யப்பட்டது. தமிழகத்தில் வசூல் செய்யப்பட்ட 7,08,854 ரூபாய் நிவாரண நிதி தொகை தேசிய தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டது.
தேசிய தலைமை நிர்வாகிகள் இந்தியாவுக்கான நேபாள தூதர் தீப் குமார் உபத்யாயை சந்தித்து முதல் கட்டமாக ரூ. 15 லட்சத்திற்கான வரைவோலை (DD) யை வழங்கினர்.
இந்தத் துயர் துடைக்கும் பணிக்காக நிதி வழங்கிய அனைத்து பொதுமக்களுக்கும் SDPI கட்சி சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.













0 thoughts on “நேபாள பூகம்ப நிவாரண நிதி: SDPI முதல் கட்டமாக 15 லட்சம் வழங்கியது! ”