சாத்தூர், ஜீன் 13–சாத்தூர் காய்கறி மார்க்கெட்டில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியது.சாத்தூரில் வடக்குரத வீதியில் நகராட்சி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகின்றது. இங்கு சுமார் 200–க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் மெயின்ரோடு அருகே உள்ள காய்கறி கடையில் தீ பிடித்து எரிந்துள்ளது.மின்கம்பத்தில் மின் கம்பிகள் அருந்து விழுந்ததில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. காய்கறி மார்க்கெட்டில் பெரும்பாலான கடைகள் கூரை செட்டுகளால் அமைக்கப்பட்டுள்ளதால் தீ அடுத்தடுத்து கடைகளுக்கும் பரவியது. தகவல் அறிந்த தீயெணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை முற்றிலும் அனைத்தனர்.இந்த தீ விபத்தில் பூக்கடை, காய்கறி கடை, பலசரக்கு கடை உட்பட 15 கடைகள் எரிந்து நாசமாகியது. சம்பவ இடத்தை டி.எஸ்.பி. குமார் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கடந்த மாதம் இதே காய்கறி மார்கெட்டில் மின் கசிவு காரணமாக இரண்டு கடைகள் எரிந்து நாசமாகியது குறிப்பிடத்தக்கது.
Home
சாத்தூரில் காய்கறி மார்க்கெட்டில் தீ விபத்து
சாத்தூரில் காய்கறி மார்க்கெட்டில் தீ விபத்து
By Unknown 4:06 AM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “சாத்தூரில் காய்கறி மார்க்கெட்டில் தீ விபத்து”