பெங்களுரூ: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விரைவில் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இதில் சட்டத்துறை அமைச்சர் ஜெயசந்திரா, ரோஷன் பேக், மற்றும் உள்துறை அமைச்சரான கே.ஜே.ஜார்ஜ், வீட்டு வரித்துறை அமைச்சர் அம்பிரிஷ் ஆகிய முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது அனைத்து அமைச்சர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒருமித்த கருத்தாக ஒப்புதல் அளித்தனர். வழக்கறிஞர்கள் பி.வி.ஆச்சார்யா, சந்தேஷ் சவுடா உச்சநீதிமன்றத்தில் ஆஜராவார்கள். அரசு தலைமை வழக்கறிஞர், சட்டச் செயலாளர் கருத்தை ஏற்று மேல்முறையீடு செய்வதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
மேல்முறையீடு ஏன்?
பெங்களுரூ சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டண விதித்து உத்தரவிட்டது. 4 ஆண்டு தண்டனையை ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய பல்வேறு தரப்பும் வலியுறுத்தினர். மேலும் ஜெயலலிதா வழக்கில் அரசு வக்கீலாக ஆஜரான ஆச்சார்யா மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியிருந்தார். அனைத்து தரப்பு கோரிக்கையை ஏற்று மேல்முறையீட்டுக்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அமைச்சர் ஜெயசந்திரா பேட்டி
மேல்முறையீட்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கர்நாடக அமைச்சர் ஜெயசந்திரா தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சரவை தீர்மானம் குறித்து ஜெயசந்திரா விளக்கம் அளித்துள்ளார். மேல்முறையீடு தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் ஜெயசந்திரா தெரிவித்துள்ளார்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=148402

0 thoughts on “ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு : கர்நாடக அரசு அறிவிப்பு”