நெஸ்லே நிறுவனத்தின் மேகி உள்பட நான்கு வகையான நூடுல்ஸ் களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார். இந்தத் தடையானது, மாநிலத்தில் மூன்று மாதங்களுக்கு நடை முறையில் இருக்கும் என வும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து வியாழக் கிழமை அவர் வெளி யிட்ட அறிவிப்பு வரு மாறு: தமிழகம் முழுவதும் 65 உணவு மாதிரிகள் பரி சோதனைக்காக எடுக்கப் பட்டன. சென்னையில் எடுக்கப்பட்ட 17 உணவு மாதிரிகளில் ஏழு மாதிரி களில் பரிசோதனைக்குப் பிறகு ஆய்வக முடிவுகள் பெறப்பட்டுள்ளன.
இந்த ஏழு மாதிரிகளில் ஆறு மாதிரிகளில் ஈயத்தின் அளவு உணவுப் பாதுகாப் புச் சட்டத்தில் அனு மதிக்கப்பட்டுள்ள 10 லட்சத்துக்கு 2.5 பகுதிகள் என்ற அளவை விட அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
எந்தெந்த நூடுல்ஸ் வகைகள்? மேகி நூடுல்ஸ், வாய் வாய் எக்ஸ்பிரஸ் நூடுல்ஸ், ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், ஸ்மித் அண்டு ஜோன்ஸ் சிக்கன் மசாலா நூடுல்ஸ் ஆகியவற்றில் அனு மதிக் கப்பட்ட அளவைவிட ஈயத்தின் அளவு அதிக மாக இருப்பது கண்டறி யப்பட்டது.
இதையடுத்து சட்டப்படியான நடவடிக் கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டது. அதன்படி, உணவுப் பாதுகாப்பு-தர நிர்ணயச் சட்டத்தின் கீழ், நான்கு நிறுவனங்களும் நூடுல்ஸ் உணவுப் பொருள் களைத் தமிழகத்தில் தயாரிப்பதற்கும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் முதல்கட்ட மாக மூன்று மாதங் களுக்கு நிறுத்தி வைத்து, உணவுப் பாதுகாப்பு ஆணையாளர் உத்தர விட்டுள்ளார்.
மேலும், இந்த வகை உணவுப் பொருள்களை விற்பனையில் இருந்து உடனடியாக திரும்பப் பெறுவதற்கும் சம்பந்தப் பட்ட உற்பத்தி நிறுவனங் களுக்கு உத்தரவிடப்பட் டுள்ளது என்று தனது அறிவிப்பில் முதல்வர் தெரிவித்துள்ளார். டில்லி, கேரளம் உள் ளிட்ட சில மாநிலங்களில் மேகி நூடுல்ஸுக்கு ஏற் கெனவே தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்தத் தடை இப்போது தமிழ கத்திலும் விதிக்கப்பட் டுள்ளது.
சென்னையைத் தவிர்த்து, தமிழகத்தின் இதர நான்கு நகரங்களில் மேகி நூடுல் ஸின் மாதிரிகள் சோதிக் கப்பட்டுள்ளன. இதன் ஆய்வு அறிக்கைகள் வெள் ளிக்கிழமை கிடைக்கப் பெற உள்ளன. இந்த ஆய்வு அறிக்கைகளுக்கு முன்பாகவே, சென்னை ஆய்வு மய்யத்தில் கிடைத்த அறிக்கையின் அடிப்ப டையில் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள் ளது குறிப்பிடத்தக்கது.













0 thoughts on “மேகி உள்பட 4 வகை நூடுல்ஸுக்கு தமிழகத்தில் தடை ”