BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

தமிழகத்தில் மூன்றாவது அணி அமையும்: இடதுசாரிகள் நம்பிக்கை

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது அணி அமையும் என இடதுசாரி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இடதுசாரிகளுடன் கூட்டணிக்கு தயார் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவனும் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சென்னையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், மதிமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் மாசிலாமணி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில்  ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்,கூட்டணி என்பது கொள்கை அடிப்படையில் அமைந்தால் மக்களுக்கு நல்லது என்று கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசும் போது, தற்போதைய தேர்தல் முறையில் மாற்றம் தேவை எனவும்,இதற்காக அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.கருத்தரங்கில் இறுதியாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணிக்கு தயார் எனவும் தெரிவித்தார். தற்போதைய தேர்தல் முறையால் விளிம்பு நிலை மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனவும் கூறினார்.  அடுத்த ஆண்டு தமிழக சட்டபேரவை தேர்தல் நடக்க இருக்கும் சூழலில், இந்த கருத்தரங்கம் தமிழகத்தில் மூன்றாம் அணி அமைய ஒரு வாய்ப்பாக கருதப்பட்டது.அதனை மெய்பிக்கும் வகையில், திமுக,அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைவதற்கான  அச்சாரம் போடப்பட்டிருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.   Link: http://www.ns7.tv/ta/node/63853 via http://j.mp/tamil_news


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “தமிழகத்தில் மூன்றாவது அணி அமையும்: இடதுசாரிகள் நம்பிக்கை