சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 27-ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் வேறு எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காது என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடாது, 2016 பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என ஏற்கனவே அறிவித்து விட்டோம். இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேறு எந்த கட்சி வேட்பாளரையும் ஆதரிப்பதில்லை என முடிவு செயதுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
காவிரி பிரச்சினை பற்றி பேசிய வாசன், “கர்நாடகத்தில் உள்ள காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதாக கூறப்படுகிறது. இதனை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.













0 thoughts on “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை: ஜி.கே.வாசன் அறிவிப்பு”