BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயன்ற பெண்கள்! டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயன்ற பெண்கள்!

திருப்பூர்: திருப்பூரில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி, அக்கடைக்கு பெண்கள் பூட்டு போட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் காலேஜ் ரோடு, சந்திரகாவி பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. பள்ளிகள், கல்லூரி, கோயில், குடியிருப்பு மற்றும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இந்த இடத்தில் அரசு விதிமுறைப்படியே டாஸ்மாக் கடை அமைத்திருக்கக் கூடாது. ஆனாலும், பல ஆண்டுகளாக இந்த கடை செயல்பட்டு வருவதால் பெண்கள், குழந்தைகளுக்கும், குடியிருப்புவாசிகளுக்கு அச்சுறுத்தலாகவும், பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் உள்ளதாகவும் அப்பகுதியினர் புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே, இந்த கடையை அகற்றக் கோரி மாதர் சங்கத்தின் மாநில மாநாட்டில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் 14-ம் தேதி பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். விரைவில் இந்த கடை அகற்றப்படும் என்று அப்போது அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், கடந்த எட்டு மாத காலத்தில் இக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்த கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி மீண்டும் பூட்டுப் போடும் போராட்டத்தை மாதர் சங்கம் அறிவித்தது. அதன்படி, மாதர் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவர் உ.வாசுகி தலைமையில் பெண்கள் ஏராளமானோர் கடை முன் திரண்டனர். இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு டாஸ்மாக் கடையைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து நின்றனர். அதையும் மீறி முழக்கங்கள் எழுப்பியபடி பெண்கள் கடையை நோக்கி சென்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினர், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் முத்துவடிவேலுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்தனர். அப்போது, இந்த கடையை உடனடியாக மூட எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க மாதர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர். ஆனால் ஆறு மாதங்களில் இக்கடையை மாற்றுவதாக முத்துவடிவேல் தெரிவித்தார். இதை ஏற்காத பெண்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இந்த கடையின் எதிரில் உள்ள குடியிருப்பில், ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி, வீடுகளின் பின்பகுதியில் புதர்களில் அமர்ந்து பலர் குடிப்பதும், தகாத செயல்களில் ஈடுபடுவதும் தொடர்ந்து வருவதை அதிகாரிகளை நேரில் அழைத்துச் சென்று காட்டினர். அத்தோடு குடிபோதையில் ரயில்வே பாதையிலேயே படுத்துக் கிடந்து பலர் ரயிலில் அடிபட்டு இறந்துபோவதும் தொடர்ந்து வருவதாக அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்தனர். இத்தனை பாதிப்புகளுக்கும் காரணமாக இருக்கும் இந்த கடையை அகற்றியே தீர வேண்டும் என்று உறுதியாக பெண்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, திருப்பூர் தெற்கு தொகுதி மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., கே.தங்கவேல் சம்பவ இடத்துக்கு வந்து காவல் துறை மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆகஸ்ட் 13-ம் தேதிக்குள் இந்த கடையை இங்கிருந்து அகற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையேற்று இப்போராட்டத்தை ஒத்திவைப்பதாகவும், அதிகாரிகள் உறுதியளித்தபடி கடையை அகற்றாவிட்டால் மீண்டும் வலிமையான போராட்டம் நடத்தப்படும் என்றும் மாதர் சங்க அகில இந்தியத் துணைத் தலைவர் உ.வாசுகி தெரிவித்தார். ச.ஜெ.ரவி Link: http://www.vikatan.com/news/article.php?aid=47948 via http://j.mp/tamil_news


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயன்ற பெண்கள்! டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயன்ற பெண்கள்!