BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கிய வீடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பு

பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் லஞ்சம் வாங்கும்   வீடியோ ஒன்று நேற்று   மாலையில் வாட்ஸ் அப்பில் வெளியாகி இருப்பது போலீசார்   மத்தியில் கடும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி  இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:- பரபரப்பான சாலையில் 2 ஆண்   போலீசாருடன் நின்று கொண்டு   பெண்  சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்  கொண்டிருக் கிறார். அவரின் அருகில் டி.என். 20 பதிவு  எண் கொண்ட  மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்கிறது.  அதில் போலீஸ்  என்று எழுதப்பட்டுள்ளது. இதன் அருகில்  வாக்கி-டாக்கியை கையில் வைத்துக் கொண்டு தோரணையுடன் நிற்கிறார் பெண் சப்-இன்ஸ்பெக்டர். அப்போது கழுத்தில் கர்சிப் கட்டிய நிலையில் காட்சி அளிக்கும் வாலிபர் ஒருவர் அவரிடம் சென்று பணத்தை கொடுக்கிறார். அதனை வாக்கிடாக்கியில் பேசுவது போலவே பாவனை  செய்து கொண்டு அந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்  பதட்டத்துடனேயே வாங்குகிறார். பின்னர் லஞ்ச பணத்தை அவசரம் அவசரமாக தனது பேண்ட் பாக்கெட்டில் திணிக்கிறார். லஞ்சம் கொடுத்த வாலிபரின் கழுத்தில் கர்சிப் தொங்கிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது, அவர் மோட்டார் சைக்கிகிளில் வந்தது தெரிய வருகிறது. அவருடன் வந்த நண்பரே லஞ்சம் கொடுக்கும் இந்த வீடியோ காட்சியை செல்போனில் பதிவு செய்து வாட்ஸ் அப்பில் பரவ விட்டுள்ளார். இந்த  வீடியோவில் இருக்கும் மற்ற 2 போலீஸ் காரர்களும் வேறு பக்கமாக திரும்பி நிற்கிறார்கள். அவர்கள் யார் என்பது  தெரியவில்லை. ஆனால் பெண் சப்-இன்ஸ்பெக்டர் யார்? என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில்  எடுக்கப்பட்ட தாகவும், அந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் இதற்கு முன்னர், சென்னையில் பணியாற்றியவர் என்றும், தற்போது  இங்கு பணிபுரிந்து வருவதாகவும்  கூறப்படுகிறது. ஆனால் இதனை  உறுதி படுத்த முடிவில்லை.இந்த வீடியோ குறித்து உயர் போலீஸ் அதிகாரி ள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் முடி வில் பெண் சப்-இன்ஸ்  பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெண்   போலீசிடம் ஆபாசமாக பேசி  சிக்கிக் கொண்ட உதவி கமிஷனரில் தொடங்கி, நேற்று வெளியான போலீஸ்  அதிகாரி ஒருவரின் ஆடியோவரை அத்தனையுமே  போலீஸ் வட்டாரத்தில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையில்   துணை கமிஷனர் அந்தஸ்தில் இருக்கும்  அதிகாரியே  வயர் லெஸ்சில்  போலீசாருக்கு கட்டளை  பிறப்பிக்கும் போது,   கடுமையான வார்த்தைகளால் அர்ச்சனை செய்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இது  தொடர் பாக  உயர்  போலீஸ் அதிகாரிகள்   விசாரணை நடத்தி வருகின்றனர். Link: www.DailyThanthi.com/News/State/2015/06/19112601/Female-Police-Officer-Bribe-Video-Tabloid-published.vpf via http://j.mp/tamil_news


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கிய வீடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பு