BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

தொழிலுக்கு உகந்த மாநிலம்: 12வது இடத்தில் தமிழகம்

சர்வதேச முதலீட்டாளர் மாநாடு வெற்றி என, தமிழக அரசு கூறி வரும் நிலையில், உலக வங்கி வெளியிட்டுள்ள, தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம், 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், குஜராத் முதலிடத்தை பிடித்துள்ளது. நக்சல் தீவிரவாத பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா மாநிலங்கள் கூட தமிழகத்தை விஞ்சியுள்ளன. இது குறித்து தனியார் தொழில் துறையினர் கூறியதாவது:தமிழகத்தில் முதலீடு செய்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளவர்களுக்கு, இந்த செய்தி நிச்சயம், நல்ல செய்தி கிடையாது. திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதை எளிதாக்கும் நடைமுறைகளை துரித கதியில் செயல்படுத்தி, இச்சவாலை சமாளிக்க தமிழக அரசு முனைப்பாக செயல்பட வேண்டும்.இதுகுறித்து உயர் அதிகாரி கூறுகையில், இந்த பட்டியல் நம்பும்படியாக இல்லை. ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களுக்கு, ஒரு சில நிறுவனங்கள் தான் செல்லும். நாம், நுாற்றுக்கணக்கான நிறுவனங்களை கையாள்கிறோம். இதை வைத்து ஒரு முடிவுக்கு வரக்கூடாது என்றார்.எளிதாக தொழில் துவங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் குறித்து, உலக வங்கி வெளியிட்டுள்ள தரவரிசை:மாநிலம் - சதவீதம் 1.குஜராத் - 71.14 2.ஆந்திரா - 70.12 3.ஜார்க்கண்ட் - 63.09 4.சத்தீஸ்கர் - 62.45 5.ம.பி., - 62.00 6.ராஜஸ்தான் - 61.04 7.ஒடிசா - 52.12 8.மகாராஷ்டிரா - 49.43 9.கர்நாடகா- 48.50 10.உ.பி., -47.37 11.மே.வங்கம்- 46.90 12.தமிழகம் - 44.58 13.தெலுங்கானா - 42.45 14.அரியானா - 40.66 15.டில்லி - 37.35 16.பஞ்சாப் - 36.73 17.இமாச்சலபிரதேசம் - 23.95 18.கேரளா - 22.87 19.கோவா - 21.74 20.புதுச்சேரி- 17.72 21.பீகார் - 16.41 22.அசாம் - 14.84 23.உத்தரகண்ட்- 13.36 24.சண்டிகர் - 10.04 25.அந்தமான்+நிகோபார் -9.73 26.திரிபுரா -9.29 27.சிக்கிம் - 7.23 28.மிசோரம்- 6.37 29.ஜம்மு - காஷ்மீர் 5.93 30.மேகாலயா - 4.38 31.நாகாலாந்து - 3.41 32.அருணாச்சல பிரதேசம் - 1.23- நமது நிருபர் -

Link:  http://www.dinamalar.com/news_detail.asp?id=1342090



nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “தொழிலுக்கு உகந்த மாநிலம்: 12வது இடத்தில் தமிழகம்