ஹஜ் புனித யாத்திரையின் முக்கிய நிகழ்வான சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சி மெக்கா அருகே உள்ள மினா நகரில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கானோர் ஒரே இடத்தில் திரண்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். விழுந்தவர்கள் எழுந்து செல்ல முடியாத அளவுக்கு கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்ததால் பலர் மூச்சுத் திணறியும், கால்களில் மிதிபட்டும் இறந்தனர்.
மாலை 6 மணி நிலவரப்படி 717 பேர் பலியானதாகவும், 805 பேர் காயமடைந்ததாகவும் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை பலியானவர்கள் பற்றிய விபரங்கள் தெரியாமல் இருந்த நிலையில், ஆந்திராவை சேர்ந்த பி.பி. ஜான் என்ற 60 வயது முதியவர் ஒருவர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கேரள மாநிலத்தின் கொடுங்கலூரை சேர்ந்த முகமது என்பவரும் பலியானதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
நெரிசலில் சிக்கியவர்கள் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள 0096 6125 458 000 மற்றும் 0096 6125 496 000 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.















0 thoughts on “மெக்கா கூட்ட நெரிசல் சிக்கி மூன்று இந்தியர்கள் பலி: உயிரிழந்தவர்காளின் எண்ணிக்கை 717 ஆக உயர்வு”