புதுடில்லி : தலைநகர் டில்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், காற்று மாசுபடுதலின் அளவை குறைக்கும் பொருட்டும், டில்லியில் குடும்பத்திற்கு ஒரு கார் என்ற திட்டத்தை முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025ம் ஆண்டில், காற்று மாசுபாட்டினால் அதிக மரணங்கள் நிகழ்ந்த நகரங்களின் பட்டியலில், டில்லி தான் முதலிடம் பிடிக்கும். 2025ம் ஆண்டில், டில்லியில் காற்று மாசுபாட்டினால், குறைந்தது 32 ஆயிரம் பேர் மரணமடைவார்கள் என்று பிரிட்டனை சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்திருந்தது.
அரியானா மாநிலத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் "கார் இல்லாத நாளாக" கொண்டாட திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, டில்லியும் இந்த கார் இல்லா நாளை கொண்டாட திட்டமிட்டுள்ளது. அக்டோபர் 22 முதல், கார் இல்லா செவ்வாய்க்கிழமை முறை அமல்படுத்தப்பட உள்ளது.
இதனிடையே, டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. நிதி நெருக்கடி உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. இதில் டில்லியில் நிலவும் அதிக போக்குவரத்து நெரிசல், காற்று மாசுபாட்டினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, டில்லி போக்குவரத்து துறை அமைச்சர் கோபால் ராய் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, டில்லியில், ஒரு குடும்பத்திற்கு ஒரு கார் என்ற அறிவிப்பை, டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் விரைவி்ல வெளியிட இருப்பதாக டில்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் சாலைகளில் போக்குவரத்து குறையும், பஸ், வேன் போன்ற பொதுப்போக்குவரத்து சாதனங்களின் பயன்பாடு அதிகரிக்கும். பஸ் உள்ளிட்ட பொது சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பால், மாநிலத்திற்கு வருமானம் அதிகரிக்கும் என்பதனடிப்படையில் குடும்பத்திற்கு ஒரு கார் என்ற முடிவை கெஜ்ரிவால் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1352998













0 thoughts on “குடும்பத்திற்கு ஒரு கார் : கெஜ்ரிவாலின் அடுத்த அதிரடி”