காத்மாண்டு: நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று நிராகரித்தது. நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என நேபாள ராஷ்ட்ரிய பிரஜடன்ரா கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்து அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடந்தி வந்தன. இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற கூட்டத்தில் இது தொடர்பான சட்ட திருத்தத்தத்தை மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்கள் நிராகரித்தனர். இதனையடுத்து இந்து நாடாக அறிவிக்க கோரும் கோரிக்கையை நாடாளுமன்றம் நிராகரித்தது. நேபாளம் தொடர்ந்து மதச்சார்பற்ற நாடாகவே இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்குப்பின் தனி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்ட்டது. ஆனால் 601 எம்.பி.க்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 21 பேர் மட்டுமே இதற்கு ஆதரவு கொடுத்தனர். நாடாளுமன்ற விதிகளின்படி குறைந்தபட்சம் 61 பேராவது ஆதரவு தெரிவித்தால் மட்டுமே தனி வாக்கெடுப்பு நடத்தமுடியும். இதனால ஓட்டெடுப்பு நடத்தப்படவில்லை. இந்து நாடு கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து இந்து மத ஆதரவாளர்கள தலைநகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களுடன் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மன்னர் ஆட்சி நடந்துவந்த நேபாளத்தில் மக்களாட்சி நடைமுறைப்படுத்தப்பட்டு 2007ம் ஆண்டு மதசார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று சில கட்சிகளும், அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=167160













0 thoughts on “இந்து நாடு கோரிக்கையை நிராகரித்தது நேபாளம்”