வாஷிங்டன்: காபி குடித்தால் தூக்கம் பாதிக்கப்படும் என்பது எல்லாருக்கும் தெரிந்து விஷயம் தான் என்றாலும் உடலின் ஒழுங்குணர்வையும் மாற்றிவிடுகிறது என்று பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர். காபியில் உள்ள கெஃபெயின் என்ற ரசயாம் உடலில் தூக்கத்தை ஏற்படுத்தும் மெலடோனின் என்ற ஹார்மோன் தயாரிப்பதை தடுத்துகிறது என்று பிரிட்டனின் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தகவல் தெரிவிக்கின்றனர். தூங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்னர் ஒரு இரட்டை எஸ்ப்ரஸ்ஸோ குடிப்பது உடல் இயற்கையாகவே மெலடோனின் என்ற இந்த ஹார்மோனை உற்பத்தி செய்வதை 40 நிமிடங்கள் வரை தாமதப்படுத்தி விடுவதாக இந்த ஆய்வு மூலம் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும் உடலின் நேர ஒழுங்குணர்வை பாதிப்பை ஏற்படுத்துவதில் கஃபேயினின் பங்கு பற்றி இந்த ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். தூக்கப்பிரச்சனைகள் மற்றும் விமானப் பயணக் களைப்பு போன்றவைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவி செய்யும் என்றும் பிபிசியின் அறிவியல் செய்தியாளர் தகவல்தெரிவித்துள்ளார்
Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=167670













0 thoughts on “காபி தூக்கத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் ஒழுங்குணர்வை மாற்றிவிகிறது: ஆய்வில் விஞ்ஞானிகள் தகவல்”