துபாய்: துபாயில் ஓட்டுநர் உரிமம் பெற நடத்தப்படும் தேர்வு, தமிழிலும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளும் அந்தந்த மொழியிலேயே தரப்படுகிறது. இதன் மூலம் அந்தந்த மொழியை சார்ந்த மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
துபாயில் ஓட்டுநர் உரிமம் பெற முதல் கட்டமாக கம்ப்யூட்டர் திரையில் ஓட்டுநர்களுக்கு தொடர்புடைய அறிவு சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் தான் அடுத்த கட்டமாக காரை இயக்குவதற்கன தேர்வுக்கு செல்ல முடியும். இந்த தேர்வு ஆங்கிலம், உருது, அரபிக் ஆகிய மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. செப்டம்பர் மாதத்தில் இருந்து, தமிழ், இந்தி, பெங்காலி, மலையாளம், ஆகிய இந்திய மொழிகள் உட்பட 11 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என அரசின் சாலை போக்குவரத்து துறையால் அறிவிக்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. துபாயில் அதிகளவில் இந்தியர்கள் உள்ளனர். துபாய் அரசின் இந்த ஏற்பாடு மிகவும் பயனளிக்கும் என துபாய் வாழ் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
Link: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=81757













0 thoughts on “துபாயில் அரசு தேர்வில் தமிழ் மொழி”