தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு வக்ஃப் வாரிய ஊழியர்கள் குடியிருப்பில் காலிமனை ஒதுக்கிய தீர்மானத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவருக்கு 3 கிரவுண்ட் காலி மனை ஒதுக்குவது தொடர்பாக தமிழ்நாடு வக்ஃப் வாரியம் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து ரஃபி பைக் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், வக்ஃப் வாரிய ஊழியர்கள் குடியிருப்பின் காலி மனைகளை நிரந்தர ஊழியர்களுக்கு மட்டுமே ஒதுக்க வேண்டும் என்றும், ஆனால் வாரிய தலைவர் பதவியை தவறாக பயன்படுத்தி தனக்கு காலி மனைகளை ஒதுக்க தீர்மானம் கொண்டு வந்து தமிழக அரசிடம் தெரிவித்ததாக கூறியிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம் சுந்தரேஷ், தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், 8 வாரத்திற்குள் பதிலளிக்க வக்ஃப் வாரியத்திற்கு உத்தரவிட்டார்.
Link: http://www.ns7.tv/ta/node/124559













0 thoughts on “வக்ஃப் வாரிய தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை”