தென் அமெரிக்காவில் இருக்கும் பிரேசில் நாட்டு காடுகளில் ஒரு வகை மஞ்சள்நிற விஷகுளவி உள்ளது. இதன் விஷத்தைக் கொண்டு புற்றுநோயைக் குணப்படுத்தலாம் என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இந்த விஷத்தில் இருந்து எடுக்கப்பட்ட புற்றுநோய் தடுப்பு மருந்துகளை சமீபத்தில் புற்றுநோயாளிகளுக்குக் கொடுத்து டாக்டர்கள் பரிசோதித்தனர். அந்த மருந்துகள், நோயாளியின் புற்றுநோய் பாதித்த செல்களை மட்டுமே அழித்தது. மற்ற செல்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே, இந்த விஷகுளவியின் விஷமருந்தை பயன்படுத்தி புற்றுநோயை குணமாக்கலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் உறுதி தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, இந்த காஸ்ட்லி மருந்து விரைவில் விற்பனைக்கு வருகிறது.
Link: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=80972













0 thoughts on “தென் அமெரிக்காவில் இருக்கும் பிரேசில்”