மலேசியா நாட்டின் பினாங்கில் இருந்து திருச்சிக்கு நேரடி விமான போக்குவரத்து இன்று இரவு முதல் தொடங்குகிறது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
திருச்சி விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு வசதிகள், பயணிகளின் வரவேற்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, தனியார் நிறுவனங்களின் பன்னாட்டு விமான சேவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மலேசியா நாட்டில் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் பினாங்கில் இருந்து திருச்சிக்கு விமான சேவையை மலிண்டோ நிறுவனம் இன்று முதல் தொடங்க உள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் துவக்க விழாவில் மலேசியா நாட்டின் சுற்றுலாத்துறை இயக்குநர் நூர் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
Link: http://www.dinamani.com/latest_news/2015/09/26/மலேசியா-நாட்டின்-பினாங்கில/article3048730.ece













0 thoughts on “மலேசியா நாட்டின் பினாங்கில் இருந்து திருச்சிக்கு நேரடி விமான போக்குவரத்து சேவை”